வீதியில் கற்களை, மரங்களை போட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்!!!

Published By: Digital Desk 7

11 Jan, 2018 | 12:14 PM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஸ்டிரதன் தோட்ட பாதையினை திருத்தி தருமாறு கோரி நூற்றுக்கும் மேற்பட்ட  தோட்ட தொழிலாளர்கள்  மரங்களையும், கற்களையும் வீதியில் போட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை உள்ள இப்பாதை பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் கர்பினித்தாய் ஒருவரை வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லும் போது வழியிலேயே குழந்தை பிரசுவித்தாகவும், பல தடைவைகள் இவ்வீதியினை திருத்தி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் காரணமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்து இவ்வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பொருட்களை கொண்டு வருவதற்கும் நோயாளர்களை கொண்டு செல்வதற்கும் பாடசாலைகளுக்கு, மாணவர்களை அனுப்புவதற்கும் கூலி வாகனங்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டு வருகின்றது.

அடிக்கடி வாகனங்கள் பழுதடைவதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்பட்டுள்ளன.

எதிர்ப்பு நடவடிக்கை இடத்திற்கு வருகை தந்த  ஹட்டன் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் ஜெமில் அவர்கள் இந்த வீதி குறித்து தோட்ட நிர்வாகத்திற்கு மக்கள் சார்பாக கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்து இதனை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பதாக தெரிவித்ததனையடுத்து மக்கள் வீதியில் போடப்பட்ட தடைகளை அகற்றி களைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13