சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளதை அந் நாட்டு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.   

எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அந் நாட்டு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

எரிமலை வெடிப்பு தொடர்பாக கமராக்களை பொருத்தி கண்கானித்து வருகின்ற நிலையில்  எரிமலையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகள் பாரிய வெடிப்பிற்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

ஆர்ஜன்டீன எல்லையை அண்மித்த பிராந்தியத்தில் குறித்த எரிமலை காணப்படுவதால் வெடிப்பு ஏற்படின் அதன் தாக்கம் ஆர்ஜன்டீனாவிலும் பெரிதும் உணரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.