நாட்டின் முதலாவது நிலைக்குத்தான வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் 22 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள நிவாஸி மாலபே, நவீன குடியிருப்பு மற்றும் தொடர்மனைகளை கொண்டுள்ளது. 

இது அண்மையில் BNI Abundance உடனான வியாபார சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

டிசம்பர் 21 ஆம் திகதி Orchid-2 தொடர்மனைத்தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல நிபுணர்கள் பங்கேற்றிருந்ததுடன், பல பன்முகப்படுத்தப்பட்ட பின்புலங்களைச்சேர்ந்த முன்னணி நிபுணர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். பல அங்கத்தவர்கள் விசேடமாக, வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்கள் பலருக்கு தமது வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள வாய்ப்பை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. அத்துடன் தமது சிந்தனைகள், தொடர்புகள் மற்றும் வியாபார பரிந்துரைகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் காணப்பட்டது.

இன்று, பல வியாபாரங்களுக்கு, பரிந்துரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. ஆய்வு கண்டறிதல்களுக்கமைய, 92 சதவீதமான நுகர்வோர், விளம்பரங்களுக்கு மாறாக தமது அன்புக்குரியவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பொருட்களை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. BNI ஸ்ரீ லங்கா தொடர்ச்சியாக, தனது வலையமைப்பை வலிமைப்படுத்தி வருவதுடன் நாட்டில் உயர்ந்த பெறுமதி வாய்ந்த பரிந்துரைப்பை இதுவரையில் பதிவு செய்துள்ளதுடன் இந்தப்பெறுமதி தற்போது 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளதுடன் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளது.

அங்கத்தவர்கள் 160 அலகு 12 அடுக்குகளைக்கொண்ட தொடர்மனைகள் தொகுதியை பார்வையிட்டிருந்ததுடன் நிவாஸியின் ஓர்கிட் தொடர்மனை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும் பார்வையிட்டிருந்தனர். இது 2018 மார்ச் மாதமளவில் குடியிருப்புக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னைய 94 அலகு, 11 அடுக்குகளைக்கொண்ட தொடர்மனைத்தொகுதியின் வெற்றியை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இந்த தொடர்மனைத்தொகுதியின் மீது பல அங்கத்தவர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன் நகரின் வெளியே தமது குடியிருப்புகளை கொண்டிருப்பதற்கு பொருத்தமான பகுதியாகவும் கருதியிருந்தனர். சுற்றுப்புறச்சூழல் பச்சைப்பசேலென காணப்படுவதுடன் இயற்கையான பசுமையான காற்று குறைந்த ஒலி மற்றும் ஓய்வுபூர்வமான சூழல் போன்றவற்றை வழங்குவதாக அமைந்துள்ளன.

கடந்த சில மாதங்களில் மாலபே பல வணிக மற்றும் வதிவிட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை எதிர்கொண்டிருந்ததுடன் வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைக்கு விரைவாக செல்லக்கூடிய வசதியை கொண்டுள்ளது. பல வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் இந்த தொடர்மனைகளை அதிகளவு கொள்வனவு செய்திருந்ததுடன் இந்த தொடர்மனைத்தொகுதி Dr. Neville Fernando Teaching Hospital, Millennium IT, Horizon Campus, SAITM, CINEC Campus, SLIIT போன்ற பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது. முன்னணி வங்கிகள் மற்றும் நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளதுடன் கவர்ச்சிகரமான மற்றும் நெகிழ்ச்சியாக கொடுப்பனவு கட்டமைப்புகளையும் பேணி வருகிறது.

தாய் நிறுவனமும் புகழ்பெற்ற ஒப்பந்த நிறுவனமுமான இன்டர்நஷனல் கொன்ஸ்ட்ரக்ஷன் கொன்சோர்டியம் பிரைவட் லிமிட்டெட் (ICC) இனால் நிர்மாணிக்கப்படும் இரண்டாம் கட்டம் நிர்மாணத்துறையில் புதிய மைல்கற்களை பதிவு செய்த வண்ணமுள்ளது. 35 வருட கால பரந்தளவு அனுபவத்துடன் இயங்கும் ICC, நாட்டின் முன்னணி நிர்மாண நிறுவனமாக திகழ்வதுடன், உயர் தரங்களை பேணுவதுடன் உரிய காலத்தில் விநியோகத்தை மேற்கொள்வதையும் உறுதி செய்கிறது.

BNI ன் அங்கத்தவர்கள், தம்மைப்போன்ற சிந்தனைகளை கொண்ட நிபுணர்களுக்கு அதிகரித்த வெளிப்படுத்தல்களை கொண்டுள்ளதுடன் சர்வதேச வலையமைப்புகளிலிருந்து பரிந்துரைகளை பெற்ற வண்ணமுள்ளனர். பிரத்தியேகமான அங்கத்தவ வளங்களினூடாக தமது வலையமைப்பு ஆளுமைகளை மேம்படுத்தி வருகின்றனர். உலகளாவிய ரீதியில் 222,000+ அதிகமான அங்கத்தவர்களை கொண்டுள்ளதுடன் வியாபார வலையைமப்பு சர்வதேச அமைப்பு (BNI) உலகின் மாபெரும் வியாபார வலையமைப்பு நிறுவனமாக அமைந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் BNI உலகளாவிய ரீதியில் 9.5 மில்லியன் பரிந்துரைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதனூடாக 13.8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வியாபாரங்கள் அதன் அங்கத்தவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.