ஏக்கியராச்சிய,ஒருமித்தநாடு என்பது தொடர்பில் எவரும் குழம்ப வேண்டிய தேவையில்லை அதற்குரிய வரைவிலக்கணம் இடைக்கால அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படுள்ளது என வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதை தெரிந்தவர்கள் பலபேர் அரசியல் இலாபங்களுக்காகவும் தாங்கள் அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்  செயல்திறன் அற்றவர்கள் தங்களுடைய செயல்திறனை மூடி மறைப்பதற்காக இதனை எடுத்து தற்போது இதற்கு எதிராக கதைத்துகொண்டிருக்கின்றார்கள்.

இடைக்கால அறிக்கையில் பொருள்கோடல் தெளிவாக கொடுகப்பட்டிருக்கின்றது. இடைகால அறிக்கையில் இதில் சமஷ்டிக்கான அடிப்படை விடயங்கள் இருக்கின்றது. சமஸ்டி என்பது பெரிய பலூன் போன்றது. இதில் இன்னும் செழுமை படுத்தப்படக் கூடிய விடயங்களை செய்யவேண்டும் மாறாக சரியில்லை சரியில்லை என்று சொல்வதில் எதுவித பிரயோசனுமும் இல்லை என்றார்.