பொரு­ளா­தார கட்­ட­மைப்­புக்கு ஏற்­ற­வ­கையில் தொழிற்­படை தயா­ரா­கின்­றதா?

Published By: Robert

11 Jan, 2018 | 10:47 AM
image

நாட்டின் பொரு­ளா­தா­ர­மா­னது கடந்த  வரு­டத்தில்  ஒரு சுமா­ரான பய­ணத்­தையே மேற்­கொண்­ட­தாக    கூறப்­ப­டு­கின்­றது. அதா­வது   இயற்கை அனர்த்­தங்கள் போன்­றவற்­றினால் நாட்டின் உற்­பத்திப் பொரு­ளா­தாரம் கடந்த வரு­டத்தில் பாரிய  பாதிப்­புக்­களை சந்­தித்­தி­ருந்­தது.  அதே­போன்று தொடர்ந்து  நாட்டின் பொரு­ளா­தா­ர­மா­னது  கடன் சுமையில் சிக்கித் தவிப்­ப­தாக  தெரி­விக்­கப்­படும் விட­யங்­களும் இங்கு அவ­தா­னத்­துக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­ய­வை­யாக உள்­ளன.  

இந்­நி­லையில் நாட்டின் பொரு­ளா­தார குறி­காட்­டி­களில் முக்­கி­ய­மா­ன­தாக   வேலை­யின்மை  வீதம் காணப்­ப­டு­கின்­றது. வேலை­யின்மை வீதத்தை வைத்து நாட்டின் பொரு­ளா­தாரம்  எந்த வகையில் பய­ணிக்­கின்­றது என்­பதை அறிந்­து­கொள்ள முடியும். பொரு­ளா­தார ரீதியில் செயற்­ப­டு­நி­லையில் உள்ள சனத்­தொ­கையின் அளவைக் கொண்டும் நாட்டின்  பொரு­ளா­தார  நிலைமை  எவ்­வாறு இருக்­கின்­றது என்­பதை அறிந்­து­கொள்ள முடியும். 

இந்­நி­லையில் எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் சனத்­தொ­கை­யா­னது  21 மில்­லி­யன்­க­ளாக உள்­ளது. அதே­நேரம்  பொரு­ளா­தார ரீதியில் செயற்­ப­டு­நி­லையில் உள்ள சனத்­தொ­கையின் எண்­ணிக்­கை­யா­னது சுமார் 82  இலட்­ச­மாக காணப்­ப­டு­கின்­றது. 

இது கடந்த 2012 ஆம் ஆண்டின் 74 இலட்­ச­மாக இருந்து படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டின்  82 இலட்சம் என்ற எண்­ணிக்­கையை அடைந்­தி­ருக்­கின்­றது.  அத்­துடன் நாட்டின் தொழில் இன்மை வீதம் 2017ஆம் ஆண்டில்  சரா­ச­ரி­யாக 4.2 அல்­லது 4.3 என்ற வகையில் அமைந்­தி­ருக்­கின்­றது.  

குறிப்­பாக  கடந்த 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து கடந்த வருடம் வரை 4 வீதம் 4.4 வீதம், 4.7 வீதம்,  4.2 வீதம் என்ற வகையில் சிறி­ய­ள­வி­லான வித்­தி­யா­சங்­க­ளுடன் வேலை­யின்மை வீத­மா­னது சரா­ச­ரி­யாக 4 வீதத்­தி­லி­ருந்­தி­ருக்­கி­றது. 

இந்­நி­லையில் அண்­மையில்  தொகை­ம­திப்பு புள்­ளி­வி­பரத் திணைக்­களம் மேற்­கொண்ட  ஆய்வில் தனியார் துறையில்  50 இலட்சம்  ஊழி­யர்கள் பணி­யாற்­று­வ­தாக  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மன்றி  நாட்டில்  சுமார் 5 இலட்சம்  தொழி­லா­ளர்­க­ளுக்­கான கேள்வி நில­வு­வ­தா­கவும்   கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.  

தையல் இயந்­திர இயக்­கு­நர்­க­ளுக்கு அதி­க­ளவில் வெற்­றிடம் காணப்­ப­டு­வ­தா­கவும், அதற்கு அடுத்­த­தாக பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள்   காணப்­ப­டு­கின்­றன.  தொழில்  வல்­லு­நர்­களின் கேள்­வியை நோக்­கு­மி­டத்து இயந்­திரப் பொறி­யியல், தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், கணக்­கியல்  தொடர்­பான  தொழில் வல்­லு­நர்­க­ளுக்கு நாட்டில் பாரிய கேள்வி நில­வு­கின்­றது. 

அந்­த­வ­கையில் நாட்டின்  தொழில்­ப­டை­யா­னது 82 இலட்சம் என்ற எண்­ணிக்­கையில் காணப்­ப­டு­கின்­றது.  வேலை­யின்மை வீத­மா­னது  4.1 வீத­மாக இருக்­கின்­றது. அத்­துடன் நாட்டில்  சுமார் 5 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­கான வெற்­றி­டங்­களும் நில­வு­கின்­றன.  இந்­நி­லையில்  நாட்டின் தொழில்­கல்வி மற்றும் இளைஞர் யுவ­தி­க­ளுக்­கான தொழில்­வாய்ப்­புக்கள்  எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்­பது  தொடர்பில் நாம்  ஆரா­ய­வேண்டி இருக்­கி­றது. 

குறிப்­பாக தற்­போது   இளை­ஞர்கள் மத்­தியில் உயர்­கல்வி கற்­ப­தற்­கான ஆர்வம் குறைந்து வரு­வதை காண­மு­டி­கின்­றது.  கல்விப் பொதுத்­த­ரா­தர  உயர்­த­ரத்­திற்குப் பின்னர்  இளை­ஞர்­களின் போக்கு  உட­ன­டி­யாக  ஏதா­வது ஒரு வரு­மா­னத்தை தேடிக்­கொள்­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

சுமார்  2 இலட்சம் பேர்  கல்விப் பொதுத்­த­ரா­தர பரீட்­சைக்கு தோற்­றி­னாலும்    அதில் 15 வீத­மா­ன­வர்­க­ளுக்கு மட்­டுமே பல்­க­லைக்­க­ழக அனு­மதி கிடைக்கும். மேலும் ஒரு குறிப்­பிட்ட தொகை­யினர் தனியார்  கல்வி நிறு­வ­னங்­களில் உயர் கல்­வியை கற்­பார்கள்.  எனினும் இந்த  ஏனை­ய­வர்கள் தொடர்பில் எவ்­வா­றான திட்­டங்கள்  உள்­ளன என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. 

அது­மட்­டு­மன்றி இன்று தனியார் துறைக்கு ஏற்­ற­வ­கையில் தொழில்­நுட்பம் தெரிந்த  இளைஞர், யுவ­தி­களை வேலைக்கு அமர்த்­து­வது  கடி­ன­மாக இருக்­கின்­றது. தொழில்­நுட்பம் தெரிந்த தொழி­லா­ளர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை எமது நாட்டில் நில­வு­வ­தா­கவே கூறலாம். அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த முறை­யி­லான தொழில்­கல்வி  கட்­ட­மைப்பு  காணப்­ப­டு­கின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது. 

அர­சாங்கம் தொழில்­நுட்ப கல்­வியை  கட்­ட­மைத்து பாடத்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வந்­தாலும்  அவை  எந்­த­ளவு தூரம்  உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களை சென்­ற­டை­கின்­றன என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்டும்.   நிலைமை இவ்­வாறு நீடிக்­கு­மானால்  தொழில்­நுட்ப அறிவு கொண்ட   தொழி­லா­ளர்­களை இன்னும் சில வரு­டங்­களில்  வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து  அழைப்­பிக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. 

இந்­நி­லையில் இது­தொ­டர்பில் எவ்­வா­றான நட­வ­டிக்கை அவ­ச­ர­மாக எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது  தொடர்பில்   பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர்  ஒருவர் எம்­முடன் கருத்து பகிர்­கையில் 

நாட்டின்  தொழில்­கல்­வித்­திட்­ட­மா­னது  பொரு­ளா­தார நிலை­மை­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் இந்த விட­யத்தில் எமது நாட்டில்  பாரிய குறை­பாடு நில­வு­கி­றது.  எமது நாட்டின்  பாட­சா­லைக்­கல்­வி­யா­னது  ஒரு மாண­வனைப் பொறுத்­த­வ­ரையில் 19 வய­தி­லேயே முடி­வ­டை­கின்­றது. அதன் பின்னர் பல்­க­லைக்­கல்வி, உயர் கல்வி என   27 வயதின் பின்­னரே  குறித்த மாணவன் ஒரு தொழி­லுக்கு உட்­பு­க­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மையில் மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும்.  

பாட­சாலை கல்­வி­யா­னது 16 வய­துடன் முடி­வ­டைய வேண்டும். அதன் பின்னர் 22 அல்­லது 23  வய­தாகும் போது உயர் கல்வி முடி­வ­டைந்து அந்த மாணவன் தொழி­லுக்கு தயா­ரா­க­வே­ண்டும். உயர்­கல்­வியை முடித்­து­விட்டு  மாணவன் நேர­டி­யாக  தொழில் செய்­யக்­கூ­டிய நிலைமை காணப்­ப­ட­வேண்டும். எனவே  இது தொடர்பில்   அர­சாங்கம் மற்றும் கொள்கை வகுப்­பா­ளர்கள் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  அது­மட்­டு­மன்றி தொழில் கல்­வியை கற்­பதில் மாண­வர்கள் மத்­தியில்  ஆர்­வ­மின்மை காணப்படுகின்றது. அதுதொடர்பாகவும்  கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கவேண்டும் என்றார். 

அந்தவகையில் தொழில்நுட்ப அறிவுமிக்க  தொழிலாளர் படையை உருவாக்குவது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.  நாட்டில் 10 இலட்சம்  தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதாக   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு கூறியிருந்தார். 

கடந்த இரண்டு வருடங்களில் எவ்வளவு புதிய தொழில்வாய்ப்புக்கள்  உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆராயப்படவேண்டும்.  அதுமட்டுமன்றி நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு ஏற்றவகையிலும்  தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கிலும்  இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில்கல்வியை  செயற்பாட்டு ரீதியில்  நடைமுறைப்படுத்த   கொள்கை வகுப்பாளர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவசியமாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13