ஊதிய உயர்வு கோரி­ய ஆசி­ரியைக்கு நடந்த விபரீதம்

Published By: Robert

11 Jan, 2018 | 10:26 AM
image

பாட­சாலை நிர்­வாக சபை கூட்­டத்தின் போது பாட­சாலை நிர்­வாக அதி­கா­ரி­யிடம் சம்­பள உயர்வு கோரி­ய­மைக்­காக  ஆசி­ரி­யை­யொ­ருவர்  அங்­கி­ருந்து கைவி­லங்­கி­டப்­பட்டு பல­வந்­த­மாக அழைத்துச் செல்­லப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க லூஸி­யானா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

 அந்தப் பாட­சா­லையில் மொழி தொடர்­பான கற்­பித்­தலில் ஈடு­பட்டு வரும்  டேஷியா ஹார்­கிரேவ் என்ற மேற்­படி ஆசி­ரியை பாட­சாலை நிர்­வாக சபையின் பொது விமர்­சனக் கூட்­டத்தின் போது எழுந்­தி­ருந்து ஆசி­ரி­யர்­களின் சம்­ப­ளங்கள் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் எனக் கோரிக்­கையை முன்­வைத்தார்.  

 பாட­சாலை நிர்­வாக அதி­கா­ரியால்  முன்­வைக்­கப்­பட்­டுள்ள   செயல்­திறன் இலக்­குகள் தொடர்­பி­லான அடை­வு­க­ளுக்­காக ஊதிய உயர்வு வழங்கும் புதிய நடை­மு­றையால்  அந்தப் பாட­சா­லை­யி­லுள்ள ஆசி­ரி­யர்கள்,  உண­வக உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும்  உத­வி­யா­ளர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த அவர்,  தாம் கடு­மை­யாக உழைக்­கின்ற போதும் தமக்கு குறைந்­த­ளவு ஊதிய உயர்வே வழங்­கப்­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டினார்.

“ நாம் மிகவும் குறைந்­த­ள­வான ஊதிய உயர்வைப் பேண கடு­மை­யாக உழைக்­கிறோம். ஆனால்  பாட­சாலை நிர்­வா­கத்தால் நிர்­ண­யிக்­கப்­பட்ட செயல்­திறன்  அடிப்­ப­டை­யி­லான  குறிப்­பிட்ட இலக்­குகள்  எமது பணியால் எட்­டப்­ப­டு­கின்­ற­னவா  என்­பது தொடர்பில் நாம் கவ­லைப்­ப­ட­வில்லை. உங்கள் இலக்­குகள் எமது பணியை மேலும் கடு­மை­யாக்­கு­வ­ன­வா­க­வுள்­ளன.  நாங்கள் அதையும் மீறி இலக்­கு­களை  எட்டும் பட்­சத்தில்  அது தொடர்பில் அது தொடர்­பான  பதவி நிலை­யி­லுள்­ள­வ­ருக்கே ஊதிய உயர்வு கிடைக்­கி­றது. இது ஆசி­ரியர் ஒரு­வ­ருக்கு துன்­ப­க­ர­மா­ன­தாகும். இதன் போது ஆசி­ரி­யர்கள் தமது முகத்தில் அறை­வது போன்று உணர்­கின்­றனர்"  .எனத் தெரி­வித்த டேஷியா ஹார்­கிரேவ், “ நான் வகுப்­பொன்றில் 20  மாண­வர்­க­ளு­ட­னேயே  எனது கற்­பித்­தலை ஆரம்­பித்தேன். தற்­போது  வகுப்பில் 29 மாண­வர்கள் உள்­ளனர். ஆனால் எமது ஊதியம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.  ஆனால் நீங்கள் (பாட­சாலை நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள்) எவ்­வாறு  அந்தப் பணத்தைப் பெறலாம்?  இது எமது சட்டைப் பையி­லி­ருந்து பணத்தை எடுப்­ப­தற்கு ஒப்­பா­ன­தாகும்"  என்று அவர் கூறினார்.

இதன்­போது பாட சாலை காவல் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் டேஷியா ஹார்­கி­ரேவை நோக்கிச் செல்­லவும் அவர் தனது பேச்சை நிறுத்தி விட்டு தனது இருக்­கைக்கு திரும்ப எத்­த­னிப்­பதும்  இந்­நி­லையில்  அந்தக் காவல் உத்­தி­யோ­கத்தர் அதனைப் பொருட்­ப­டுத்­தாது அவ­ரது கையைப் பற்றி வெளியே இழுத்துச் சென்று அவரை கீழே தள்­ளிய பின்னர் அவ­ருக்கு கைவி­லங்­கிட்டு அழைத்துச் செல்­வதும் அந்தக் கட்­ட­டத்­தி­லுள்ள  கண்காணிப்பு காணொளிப் புகைப்­படக் கரு­வியில் பட­மா­கி­யுள்­ளது.

பாட­சாலை நிர்­வாக அதி­கா­ரியால்  முன்­வைக்­கப்­பட்ட செயல்­திறன்  உடன்­ப­டிக்கை குறித்து கலந்­து­ரை­யாட ஏற்­பாடு செய்­யப்­பட்ட  கூட்­டத்தில்   ஆசி­ரி­யர்­களின் ஊதிய உயர்வு குறித்து உரை­யாடி குழப்பம் விளை­வித்­த­தாக  குற்­றஞ்­சாட்­டியே டேஷியா ஹார்­கிரேவ்  பாட­சாலை காவல் உத்­தி­யோ­கத்­தரால் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்பில் வேர்­மி­லியன் பாரிஷ் 

பாட­சா­லை­களின் நிர்­வாக அதி­காரி கூறு­கை யில், கப்லன் பிராந்­தி­யத்­தி­லுள்ள ரோஸங் மிடில் பாட­சா­லையில் ஆசிரியையாகப் பணியாற்றும் டேஷியா ஹார்கிரேவ் மீது  குற்றச்சாட்டு எதனையும் சுமத்த தாம் அழுத்தம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும் ஆசிரியையொருவர் தனது கருத்தை அமைதியான முறையில் தெரிவித் தமைக்காக  கூட்டத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை பிராந்திய ஆசிரியர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17