ஒரு­வ­ருக்­கொ­ருவர் திரு­டர்களென அவர்­களே தூற்­றிக்­கொள்­கின்­றனர்

Published By: Robert

11 Jan, 2018 | 09:53 AM
image

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பாரா­ளு­மன்­றத்தில் இல்­லாத நிலையில் ஏனைய தரப்­பினர் ஒரு­வ­ருக்கு ஒருவர் திருடர்  பட்டம் சூட்­டிக்­கொண்டு பாரா­ளு­மன்­றத்தில் சண்டை போடும் நிலைமை இன்று உரு­வா­கி­யுள்­ளது. இரண்டு தரப்­பிலும் யார் கள்வர்கள் என்­பதை மக்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சர்­வ­தேச விசா­ரணை, மின்­சா­ரக்­க­திரை அழுத்­தங்கள் எமக்­கெ­தி­ராக எழுந்த நிலையில் நானே நாட்­டினை மீட்­டெ­டுத்தேன் எனவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் பிரச்­சாரக் கூட்டம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நேற்று பிற்­பகல் அனு­ரா­த­புரம் சல்­காது விளை­யாட்­ட­ரங்கில்  இடம்­பெற்­றது.  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் அனைத்தும் பங்­கு­பற்­றிய இந்த கூட்­டத்தில்    உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில் 

இந்த நாடு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மையின்  கீழேயே கட்­டி­யெ­ழுப்­ப­பட்­டுள்­ளது. எமது கலா­சாரம், எமது பாரம்­ப­ரியம், எமக்­கான கொள்­கை­களின்  மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பி­யுள்­ளது. இந்த வர­லாற்றை யாராலும் நிரா­க­ரிக்க முடி­யாது. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்­டா­ர­நா­யக்க எமது தலைவர் அன்று எடுத்த தீர்­மா­னங்கள் கொள்­கைகள் மூல­மாக அவரை கட்­சியின் சில முத­லா­ளித்­து­வ­வா­தி­களே கொலை செய்­தனர். எனினும் அவர் கொள்­ளப்­பட்­டாலும் அவர் எமக்கு வழங்­கிய  வழி­காட்­டலே இன்­று­வ­ரையில் எம் மத்­தியில் உள்­ளது. 

அவ்­வா­றான நிலையில் கடந்த காலம் இலங்­கையின் வர­லாற்றில் மிகவும் கசப்­பான வர­லா­றாகும். இந்த நாடு ஊழல், குற்றம், சர்­வா­தி­கார பாதையில் பய­ணிதத் நிலையில் நாம் முன்­வந்து நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.  இன்று நாட்­டுக்கு நேர்­மை­யான, உறு­தி­யான உண்­மை­யான அர­சியல் கட்­சி­யொன்று தேவைப்­ப­டு­கின்­றது. மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை இனங்­கண்டு நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் அர­சாங்கம் ஒன்று தேவைப்­ப­டு­கின்­றது. அதற்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும். நாட்­டினை நேசிக்கும் மக்கள் அனை­வரும் ஸ்ரீலங்கா சுதந்­தர கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட வேண்டும். 

இந்த நாட்டின் விவ­சாய மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வச­திகள் தேவைப்­பட்ட நிலையில் மொர­க­ஹா­கந்த நீர்த்­தேக்­கத்தை உரு­வாக்கி அதை அனு­ரா­த­புரம் மக்­க­ளுக்கு ஒப்­ப­டைத்­து­விட்டேன். என்னால் செய்­யப்­பட்ட அதி உய­ரிய கட­மை­யாக இதனை கரு­து­கின்றேன். அன்று பலர் பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைத்­தனர்.  எனினும் அவற்றை நாங்கள் கருத்தில் கொள்­ள­வில்லை. இன்று எமது ஆட்­சியில்  நாம் உரு­வாக்­கிய மொர­க­ஹா­கந்த திட்­டத்­திற்கு உரிமை கொண்­டாட சிலர்  முயற்­சித்து வரு­கின்­றனர். அன்று நாம் மிகவும் கடி­ன­மான சூழலில் இதனை இனங்­கண்டு மக்­க­ளுக்­கான தியா­க­மாக கரு­திய வேளையில் அதனை தடுக்­கவும் வியா­பாரம் செய்­யவும் அப்­போதே சிலர் முயற்­சித்­தனர். 

எனது அமைச்சு பத­வியை மாற்றி வேலைத்­திட்­டத்தை தடுக்க அப்­போ­தைய தலை­வர்கள் தீர்­மானம் எடுத்­தனர். அவ்­வாறு இருக்­கையில் நான் சண்­டை­யிட்டு மீண்டும் அமைச்சை பெற்றேன். எனினும் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு எனது அமைச்­சிற்கு நிதி ஒதுக்­கப்­பட வில்லை. நான் சர்­வ­தேச நிதியை பெற்று கடி­ன­மான முயற்­சி­களை கையாண்டேன். அன்று எனக்கு இதற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின்  ஐந்து  ஆண்­டு­க­ளுக்கு முன்னர் மொர­க­ஹா­கந்த திட்டம் நிறை­வேற்­றப்­பட்டு வடக்கு கிழக்கு வடமேல் மாகாண மக்­க­ளுக்கு நீர் கிடைத்து மக்கள் போசாக்­குடன் வாழ்ந்­தி­ருக்க முடியும். எனினும் எமது   கரங்­களை கட்­டிப்­போட்­டாலும் எனது தலை­மையில் மக்­க­ளுக்கு மொர­க­ஹா­கந்த திட்­டத்தின் மூல­மாக பாரிய சேவை­யினை வழங்­கி­யுள்ளேன். 

 நாம் ஊழல் மோச­டிகள் இல்­லாத நாட்­டினை உரு­வாக்கும் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்றோம். எனினும் அன்றும் நான் அதற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்தேன்.  கட்­சியின்  அப்­போ­தைய தலைவர் பாரிய தவ­று­களை செய்­துள்ளார். கட்­சியின் கொள்­கை­யினை அர­சாங்­கத்தின் கொள்­கை­யினை சரி­யாக நடத்த தவ­றி­விட்டார். நான் பல சந்­தர்ப்­பங்­களில் எமது அதி­கா­ரி­களை சரி­யாக நடந்­து­கொள்ள வலி­யு­றுத்­திய போதும் கட்­சியின் தலைவர் அவர்­களை தவ­றாக வழி­ந­டத்­தினார். எனது ஆட்­சியில் அது இடம்­பெறக் கூடாது என்­ப­தற்­கா­கவே நான் தொடர்ச்­சி­யாக எனது அமைச்­சர்­க­ளுக்கு வலி­யு­றுத்தி வரு­கின்றேன். பொது மக்­களின் சொத்­துக்­களில் எவரும் கைவைக்க முடி­யாது. தமது பைகளை நிறைத்­து­கொண்டு மக்­களை தண்­டிக்கும் எந்த செயற்­பா­டு­க­ளுக்கும்  எனது கட்­சியில் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன். 

இன்று பாரா­ளு­மன்றம் கூடிய  போது  மிகவும் மோச­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றது . நாம் இன்று அனு­ரா­த­பு­ரத்தில் கூடிய நிலையில் பாரா­ளு­மன்­றத்தில் இருந்த இரண்டு தரப்பும் தம்மை திரு­டர்கள்  என விமர்­சித்­துக்­கொள்­கின்­றனர். நாம் அங்கு இல்­லாத நிலையில் இரண்டு தரப்­பி­னரும்  அடித்­துக்­கொண்டு பாரா­ளு­மன்­றத்தை அவ­ம­திக்கும் வகையில் செயற்­பட்­டுள்­ளனர். இரு­வரும் தங்­களை திரு­டர்கள் என கூறிக்­கொண்டு விமர்­சித்து வரு­கின்­றனர். இன்று அர­சி­யலில் இதுவே இடம்­பெற்று வரு­கின்­றது. ஆகவே இவர்­களில் யார் திரு­டர்கள்  என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். இவர்­களில் எவரும் தூய்­மை­யான அர­சி­யலை செய்­ய­வில்லை என்­பது மக்­க­ளுக்கு தெரிந்­து­விட்­டது. 

ஆகவே இவர்­களில்  யார் திரு­டர்கள்   என்­பது அவ­ரவர் மன­சாட்­சிக்கு நன்­றாக தெரியும். எனினும் தூய்­மை­யான ஒரு ஆட்சி அவ­சியம், பாரா­ளு­மன்றம், மாகா­ண­சபை மற்றும் பிர­தே­ச­சபை அவ­சி­ய­மா­கின்­றது. ஆகவே முதலில் நாம் நல்­ல­தொரு கிரா­மத்தை உரு­வாக்­குவோம், அதன் மூலம் நல்­ல­தொரு நாட்­டினை உரு­வாக்­குவோம் அதற்­காக நாம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் கைகோர்த்து செயற்­ப­டுவோம். 

 இன்று புதிய அர­சியல் கட்­சிகள் உரு­வாக்கி வரு­கின்­றன. எமக்கு இது பெரிய விடயம் அல்ல. இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்­சி­களும் பாரிய கட்­சிகள். இப்­போது உரு­வாகி வரும் கட்­சிகள் பிர­தான கட்­சி­களை வீழ்த்த முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை வீழ்த்­தவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இது மீண்டும் ஒரு­முறை பண்­டா­ர­நா­ய­காவை  கொலை செய்­வ­தற்கு சம­மா­னது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆட்­சியை வீழ்த்­தினால் என்ன நடக்கும் என்­பது மக்­க­ளுக்கு தெரியும். அது நாட்­டி­னையும் எமது மக்­க­ளையும் தண்­டிக்கும் செயட்­பா­டாகும். புதிய கட்­சி­க­ளுக்கு கொள்கை, தன்­மைகள் எவையும் இல்லை. ஆட்­சியை கையில் எடுக்க முடி­யாது, வேலைத்­திட்டம் ஒன்று இல்லை, ஆகவே அவர்­களை மக்கள் ஆத­ரிக்க முடி­யாது. மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு, நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியால் மட்­டுமே முடியும். 

அதேபோல் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க போவ­தாக சிலர் கூறு­கின்­றனர். இதனை யார் செய்­தது. இரா­ணு­வத்தை வழி­ந­டத்தி புலி­களை முழு­மை­யாக அழித்த இரா­ணுவத் தள­பதி  சரத் பொன்­சே­காவை சிறையில் அடைத்­தது யார். பொன்­சே­காவை தண்­டித்த நபர்கள் இன்று எம்மை விமர்­சித்து வரு­கின்­றனர்.  சர்­வ­தேச  அழுத்தம் எழுந்­த­போது  நான்  சர்­வ­தேச தலை­வர்­களை  சந்­தித்து எமக்கு எதி­ரான அனை­வ­ரையும் எனது பக்கம் இணைத்­துக்­கொண்டேன். மின்­சாரக் கதி­ரைக்கு கொண்­டு­செல்ல இருந்த எமது இரா­ணு­வத்தை ,  சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு கொண்­டு­செல்ல விருந்த எமது  நாட்­டினை காப்­பாற்­றி­யது நான் என்­பதை மறந்­து­விட வேண்டாம். எமது நாட்­டுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடைகள், மீன்  ஏற்­று­மதி, ஆடை ஏற்­று­மதி தடைகள் விதித்து நாட்­டினை நிரா­க­ரித்­தனர். ஜன­வரி மாதம் ஏற்­பட்ட ஆட்சி மாற்றம் இடம்­பெ­ற­வில்லை என்றால் இந்த நாடு பிச்­சைக்­கார நாடாக மாற்றம் பெற்­றி­ருக்கும். அவ்­வாறு இருக்­கையில் நாம் தலைமை ஏற்றே இவை அனைத்­தையும் மாற்றி சர்­வ­தே­சத்தை எமது நண்­பர்­க­ளாக மாற்­றி­ய­மைத்தோம். நாங்கள் மிகவும் சரியாக புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம் இதில் மக்களை சமூகத்தை நாட்டினை கட்டி எழுப்பும் பயணமாக முன்னெடுத்து செல்கின்றோம். இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி சின்னத்தில் முன்னோக்கி செல்லும் என்பதை தெரிவிக்கின்றேன். இன்று எமது கூட்டத்தில் வேறு மாவட்ட மக்கள் வரவில்லை. இந்த பிரதேச மக்களே முழுமையாக உள்ளனர். எமது மக்கள் பலம் என்ன என்பதை தேர்தலின் பின்னர் நாம் வெளிபடுத்துவோம். இந்த நாட்டினை விரும்பும், நாட்டினை ஆதரிக்கும் மக்கள் இன்றும் எம்முடன் உள்ளனர் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக சகல பகுதிகளிலும் போட்டியிடுகின்றோம். இதில் எமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும், மக்கள் எம்முடன் கைகோருங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17