தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று அதிகாலை 01.00 மணி முதல் 03.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி இந்தக் காலப்பகுதியில், தெற்கு அதிவேக வீதியின் வெலிபன்னவில் இருந்து குருந்துகஹஹெதெம்ம வரையான பாதையில், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான வாகனமொன்றை அகற்ற வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.