புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கஞ்சாவுடன் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தினுள் குறித்த இளைஞன் தனது ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

மேலும், இவர் ஹபுதலை - கிரிமானகம பகுதியைச் சேர்ந்தவராவர்.

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.