களுத்துறை மாவட்டத்தில், பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் 2014-06- 15 மற்றும் 2014-06- 16 தினங்களில் ஏற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில், பேருவளை மற்றும் அளுத்கமை பிரதேசங்களில் 2014-06- 15 மற்றும் 2014-06- 16 தினங்களில் ஏற்பட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வீட்டு உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நட்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை.

அந்தப் பாதிப்புக்கள் குறித்துப் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவினால் மேற்கூறப்பட்ட பாதிப்புக்களுக்கும் நட்டஈட்டு தொகையினை பெற்றக் கொடுப்பதற்கு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, தற்போது காணப்படுகின்ற விதிகளுக்கு அமைவாக, அந்நட்டஈட்டு தொகையினை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.