நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்குப் பதிவுக்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில், உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவை எதிர்வரும் 13ஆம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர் பெயர்ப் பட்டியல் அச்சிடல் தாமதம் ஆவதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.