ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் விசேட பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த எஸ்.எம்.விக்ரமசிங்க, மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட முன்னர், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரியாகக் கடமையாற்றிய இவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்திலும் ஜனாதிபதி மற்றும் விசேட பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

இந்தப் பதவி மாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.