தென்னாபிரிக்காவின் கிழக்கு ஜோஹன்னஸ்பேர்க்  பகுதியிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஜெர்மிஸ்டன்  நகர்  ரயில் நிலையத்தில் இன்று  இடம்பெற்றுள்ள ரயில் விபத்தில் சுமார் 220ற்கும் அதிகமானோர்  காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பின்னால் மற்றுமொரு ரயில் வந்து மோதியதன் காரணமாகவே குறித்த ரயில் விபத்து  இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் தொடர்பான எதுவித தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.