சர்வதேச பனிச் சறுக்குப் போட்டியொன்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஆஞ்ச்சல் தாக்கூர் (21).

சர்வதேச பனிச் சறுக்கு அமைப்பினால் துருக்கியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ‘அல்பைன் எஜர் 3200 கிண்ணப் பனிச் சறுக்குப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றே ஆஞ்ச்சல் இந்தச் சாதனையைப் படைத்தார்.

இதையடுத்து, ஆஞ்ச்சலை முதன்முதலாக வாழ்த்தியிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. “செல்வி. தாக்கூரின் வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு பாரத தேசமே மகிழ்ச்சியடைகிறது” என்று மோடி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சாதனையையடுத்து, தேசிய அளவில் நேற்று ட்விட்டரில் ‘ட்ரெண்டிங்’காக இருந்தார் ஆஞ்ச்சலின்.