வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரனுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியன இல்லாது வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து இத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நபருக்கு 3 மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.ரியாழ் உத்தரவிட்டார்.