உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது நினைவு தினம் இன்று யாழில் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவத்தூபியில் இன்று காலை 9.30 மணிக்கு இந் நிகழ்வு நடைபெற்றது.

 

கடந்த 1974 ஆம் ஆண்டு  யாழில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது  படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள இவ் நினைவத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன்,  அ.பரஞ்சோதி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.