ரவி தேடிக்­கொண்ட வினைக்கு நான் பொறுப்­பா­ளி­யல்ல

Published By: Priyatharshan

10 Jan, 2018 | 10:24 AM
image

எங்கள் கட்­சியை கொழும்­பி­லி­ருந்து துடைத்து எறி­யப்­போ­வ­தாக, வட­கொ­ழும்பு புளு­மெண்டால் வட்­டா­ரத்தில் நடை­பெற்ற ஒரு  கூட்­டத்தில் கூறி­யுள்ள  ரவி கரு­ணா­நா­யக்க எம்­.பி.யை பார்த்து எனக்கு சிரிப்பு வரு­கி­றது. இந்த ரவி கரு­ணா­நா­யக்க,  இன்று அமைச்­ச­ர­வையில் இருந்து துடைத்து எறி­யப்­பட்டு விட்டார்.

இப்­போது இவ­ரது தன் சொந்த கட்­சியில் இருந்தே படிப்­ப­டி­யாக துடைத்து எறி­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார். அத்­துடன் அர­சாங்­கத்­தி­லி­ருந்து  முழு­மை­யாக தூக்கி எறி­யப்­படும் சூழ­லையும்  இவர் எதிர்­நோக்­கு­கிறார். இவை அனைத்தும் இவரே தேடிக்­கொண்ட வினைகள் என்­பது முழு­நாடும் அறியும். உப்பை அள்ளி சாப்­பிட்ட அவர் இன்று தண்ணீர் குடித்­துக்­கொண்டு இருக்­கிறார். இவற்­றுக்கு நான் காரணம் இல்லை.  என முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­சரும், கொழும்பு மாவட்ட எம்­பி­யு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார். 

 என்­னையும், என் கட்­சி­யையும் துடைத்து எறி­யப்­போ­வ­தாக சொல்லும் இவ­ரது கருத்து, இந்த புதிய ஆண்டின் முதல் மகா நகைச்­சு­வை­யாக இருக்­கி­றது. இவ­ரை­விட மிகப்­பெ­ரிய கொம்­பர்­க­ளை­யெல்லாம் எதிர்­கொண்ட எனது வர­லாற்றை மறந்­து­விட்டு, யாருடன் மோது­கிறோம் என்ற தெளி­வில்­லாமல் எனக்கு இவர் சவால் விடு­கிறார். இவ­ரைப்­போன்ற அர­சியல் கோமா­ளி­களின் வெற்று கூச்­சல்­க­ளையும், கட்­ட­ளை­க­ளையும் கேட்டு, பயந்து, வீட்­டுக்கு உள்­ளேயே முடங்­கி­விடும் பழைய தலை­மு­றையை சார்ந்­தவன் நானல்ல என்­ப­தையும்,  நான் தன்­மா­ன­முள்ள ஒரு புதிய தலை­முறை தமிழ் இலங்­கையன், கட்­சித்­த­லைவர், கூட்­டணி தலைவர், அமைச்­ச­ரவை அமைச்சர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­ப­தையும், இவர் நினைவில் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். ஆகவே அர­சி­யலில் என்­னுடன் விளை­யாட வேண்டாம் என நண்பர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு  கூறு­கிறேன்  எனவும் அவர்  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

கட்சி தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற  ஜன­நா­யக இளைஞர் இணைய செயற்­குழு கூட்­டத்தில் விளக்க உரை­யாற்­றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,   

உண்­மையில் இன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கொழும்பு மாந­கர சபை தேர்­தலில் கூட்டு சேர்ந்து போட்­டி­யிடும் ஏனைய சிறு­பான்மை கட்­சி­க­ளான முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்  ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளையும், ரவி கரு­ணா­நா­யக்க  கடும் அதி­ருப்­திக்கு ஆளாக்­கி­யுள்ளார். வேட்பு மனுவில் இரவில் கையெ­ழுத்து போட்ட சில­ரது பெயர்கள் காலையில் வெட்டி அழிக்­கப்­பட்டு மாற்று பெயர்கள் புகுத்­தப்­பட்­டுள்­ளன. எங்கள் கட்­சியும் உடன்­பட்டு இவர்­க­ளது வேட்பு மனுவில் கையெ­ழுத்­திட்­டி­ருந்தால், எங்கள் முக்­கி­ய­மான வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் கடைசி நேரத்தில் இப்­படி வெட்டி அழிக்­கப்­பட்டு இருக்கும். ஏனைய சிறு­பான்மை கட்­சிகள் இந்த சதியில் சிக்­கிக்­கொண்­டார்கள். நாம் சிக்­க­வில்லை. இதுதான் உண்மை.   

கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் எமது கட்சி தனித்து போட்­டி­யி­டு­கி­றது. ஆனால், கொழும்பு மாவட்­டத்தில் தெகி­வளை, கொலோன்­னாவை, அவி­சா­வளை ஆகிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டு சேர்ந்து போட்­டி­யி­டு­கி­றது. நாடு முழுக்­கவும் இரு­ப­துக்கும் மேற்­பட்ட சபை­களில் நமது கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கூட்டு சேர்ந்து போட்­டி­யி­டு­கி­றது. பதி­னான்கு சபை­களில் நாம் தனித்து ஏணி சின்­னத்தில் போட்­டி­யி­டு­கிறோம். இதில் ஒன்­றுதான் கொழும்பு மாந­க­ர­சபை. 

கொழும்பில் நாம் தனித்து போட்­டி­யிட்டு எங்கள் வாக்­கு­களை நாம் பெற்­றுக்­கொள்ள போவ­துதான் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இன்­றைய பிரச்­சினை. இதற்கு என் மீது கோபப்­பட்டு பிர­யோ­ஜனம் இல்லை. இந்­நிலை உரு­வா­ன­தற்கு கார­ணமே இவர்தான். இது ஐக்­கிய தேசிய கட்­சியின் அனைத்து மட்ட தலை­வர்­க­ளுக்கும் தெரியும். ஆகவே கொழும்பில்  நாம் ஏன் தனித்து போட்­டி­யி­டு­கிறோம் என்ற கார­ணத்தை தேடு­ப­வர்கள் அதை ரவி கரு­ணா­நா­யக்­க­வி­டம்தான் கேட்க வேண்டும். 

இது அர­சாங்­கத்தை மாற்றும் தேர்தல் இல்லை.  இது உள்­ளூ­ராட்சி குட்டி தேர்தல். அத­னால்தான், நமது கூட்­டணி, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய மூன்று சிறு­பான்மை கட்­சி­களும் நாடு முழுக்க சில இடங்­களில் சேர்ந்தும், சில இடங்­களில் தனித்தும் போட்­டி­யி­டு­கிறோம். நாங்கள் அனை­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளி கட்­சிகள். அதில் எந்த மாற்­றமும் இல்லை. 

தனித்து போட்­டி­யிடும் ஒரே கட்­சியின் ஒரே தலைவர் மனோ கணேசன் என்று, ரவி கரு­ணா­நா­யக்க காட்­டப்­பார்க்­கிறார். இது ஒரு அநா­க­ரீ­க­மான வெட்­கங்­கெட்ட பொய். பாரா­ளு­மன்ற தேர்­தலில் சேர்ந்தும், மாந­க­ர­ச­பையில் தனித்தும் போட்­டி­யி­டு­வதை ஒரு தவ­றாக காட்­டவும்  அவர் முயல்­கிறார். நாங்கள் யாரும் ஐக்­கிய தேசிய கட்­சி­கா­ரர்கள் அல்ல. நாம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­கா­ரர்கள். இந்த அர­சியல் அறிவு  இவ­ருக்கு இல்லை.  இது எங்கள் உரிமை. அதுதான் ஒரு தனி கட்சி என்­பதன் அடையாளம். பாராளுமன்ற தேர்தலில் நாடெங்கும் நாம் சேர்ந்து போட்டியிடுவது இரு தரப்புக்கும் சாதகமானது என்ற அடிப்படையில், நானும், என் கூட்டணியின் சக பிரதி தலைவர்களும், ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி முடிவு செய்கிறோம். இதுபற்றி ரவி கருணாநாயக்கவிடம் நாம் பேசுவதில்லை.  அதற்கு அவசியமில்லை. அதேபோல் தனித்து போட்டியிடுவதும் எங்கள் உரிமை.  இதுபற்றி பேச ரவி கருணாநாயக்க யார்? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04