தனது பிறந்த தினத்தன்று குன்றின் மேல் ஏறி நின்று புகைப்படத்துக்குக் காட்சி தந்தவர், எதிர்பாராத விதமாக 150 அடி பள்ளத்தில் விழுந்து மரணத்தைத் தழுவினார்.

துருக்கியைச் சேர்ந்தவர் ஹலில் தக்கா (39). இவர் தனது பிறந்த தினத்தன்று நண்பர் ஒருவருடன் மலைப் பாங்கான பகுதிக்குச் சென்றிருந்தார்.

அங்கு, குன்று ஒன்றின் மீது ஏறி நின்று புகைப்படத்துக்குக் காட்சி கொடுத்த ஹலில், கீழே இறங்குவதற்காகக் குதித்தார்.

அப்போது, நிலைதடுமாறிய அவர், பிடிமானம் எதுவும் இல்லாததால் சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்தார். பதறிய அவரது நண்பரால் ஹலிலுக்கு எந்த உதவியையும் செய்ய முடியாமல் போனது.

தலை குப்புற விழுந்த ஹலில், அந்தக் குன்றின் அடிவாரத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகாமையில் விழுந்து மரணமானார்.

எட்டுக் குழந்தைகளின் தந்தையான ஹலிலின் மரணத்தால், அவரது குடும்பம் கடும் சோகத்துக்கும் மனவுளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறது.