பூண்டை பாலுடன் சேர்த்துக் குடிக்­கலாம். இதனால் உட­லுக்கு ஏரா­ள­மான நன்­மைகள் கிடைக்கும். இந்த பால் குழந்­தைகள் முதல் பெரி­ய­வர்கள் வரை அனை­வரும் குடிக்­கலாம். பால் மிகவும் சுவை­யா­ன­தா­கவும் இருக்கும்.

* உங்­க­ளுக்கு திடீ­ரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்­போது பூண்டு சேர்த்த பாலைக் குடி­யுங்கள். இதனால் பூண்டில் உள்ள கல­வைகள் சளி மற்றும் காய்ச்­சலில் இருந்து உட­னடி விடு­தலையைக் கொடுக்கும்.

* உங்கள் முகத்தில் முகப்­பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தட­வு­வ­தோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வரு­வதை முழு­மை­யாகத் தடுக்­கலாம்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்­பாலின் சுரப்பு அதி­க­ரிக்கும். அதிலும் பிர­சவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்­தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவை­யில்­லாத கொழுப்­பையும் கரைக்கும்.

* செரி­மானம் பிரச்­சினை இருப்­ப­வர்கள் பூண்டு பால் குடிப்­பது நல்­லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரி­மான திர­வத்தை தூண்டி, உண­வுகள் எளிதில் செரி­மா­ன­மாக உதவும்.

* பூண்டு கலந்த பாலைக் குடிப்­பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்­களை அழிக்­கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.