பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சீருடைக்கான வவுச்சர்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மூன்றாம் தவணை நிறைவோடு, இவ்வாண்டுக்கான வருடாந்த சீருடை வவுச்சர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன் கால எல்லை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கணிசமானோர் வவுச்சர்களைப் பயன்படுத்தி சீருடைக்கான துணியைக் கொள்வனவு செய்தபோதும் பெருவாரியானோர் அதை இதுவரை பயன்படுத்தாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த வவுச்சர்களுக்கான கால எல்லையை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்க கல்வியமைச்சு முடிவுசெய்துள்ளது.