அமெரிக்காவில் மனைவியுடன் விவாகரத்து பெறாமல் அவருக்கு பிறந்த  மகளை திருமணம் செய்து கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 44 வயதான கிறிஸ்டோபர் ஹவ்ப்ட்மேன்  கடந்த 2015ஆம் ஆண்டு ஷனோன் டெய்ட்ரிச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

டெய்ட்ரிச்சுக்கு ஏற்கனவே திருமணமாகி 19 வயதில் கயிலி டுரோவிக் என்றொரு மகள் இருக்கிறார்.

ஒரே வீட்டில் மூவரும் தங்கிருந்த நிலையில் மகள் முறை உறவான கயிலியுடன் கிறிஸ்டோபருக்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெய்ட்ரிச் தனது கணவருடன் சண்டை போட்டு கொண்டு திருமணமான சில மாதங்களில் பிரிந்து சென்றுள்ளார்.

இதையடுத்து கடந்தாண்டு கயலியை கிறிஸ்டோபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் கயிலியுடன் தான் உறவு கொள்ளும் புகைப்படங்களை முதல் மனைவிக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து  டெய்ட்ரிச் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார்  கிறிஸ்டோபரை கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு முதற்கட்டமாக குறைந்தபட்சம் 364 நாட்கள் மற்றும் அதிகபட்சமாக 729 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் ஏற்கனவே பொலிஸ் காவலில் 332 நாட்கள் இருந்துள்ளால் தண்டனை இதில் கழிக்கப்பட்டது.

இத்தோடு 10 ஆண்டுகள் நன்னடத்தை சோதனை நிலையை கண்காணிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.

கிறிஸ்டோபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீதான அடுத்த விசாரணை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கைத்துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி வாங்கியதில் மோசடி செய்த வழக்கு கிறிஸ்டோபர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.