மும்­பையில் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு முன்னர் போலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யா­வுக்கு பல­முறை சென்று மும்­பையை முழு­மை­யாக உளவு பார்த்தேன் என்று லஷ்­கர்-­ இ -­தொய்பா தீவி­ர­வாத இயக்­கத்­தினை சேர்ந்த டேவிட் ஹெட்லி தெரி­வித்­துள்ளார்.

மும்பை தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக அமெ­ரிக்க சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள டேவிட் ஹெட்லி அர­ச­த­ரப்பு சாட்­சி­யாக மாறிய நிலையில் ‘வீடியோ கான்­ப­ரன்சிங்’ மூலம் மும்பை நீதி­மன்­றத்­திற்கு நேற்று வாக்­கு­மூலம் அளித்­த­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இதன் போது மேலும் தெரி­வித்­ததா­வது,

டேவிட் ஹெட்லி என்ற நான் லஷ்­கர்-­ இ -­தொய்பா தீவி­ர­வாத இயக்­கத்தின் உண்­மை­யான ஆத­ர­வா­ள­ராக இருந்தேன்.

அமெ­ரிக்­காவில் இருந்து இந்­தி­யா­விற்குள் நுழைய எனது பெயரை மாற்றிக் கொண்டேன். 2006ஆம் ஆண்டு டேவிட் ஹெட்லி என்ற பெயரை தாவூத் கிலானி என்று மாற்றிக் கொண்டேன். என்­னு­டைய பெயரை மாற்றிக் கொண்­டது தொடர்­பாக லஷ்­கர்-­ இ-­ தொய்பா தீவி­ர­வாதி சாஜித் மிரிடம் தகவல் தெரி­வித்தேன். என்­னு­ டைய பெயரை மாற்­றிய ஒரு சில வாரங்­களில் பாகிஸ்தான் சென்றேன். இந்­தி­யா­விற்குள் செல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக பெயரை மாற்­றினேன். இந்­தி­யாவில் தொழில் ஏதா­வது செய்­ய­வேண்டும் என்று சாஜித் மிர் என்­னிடம் கூறினார்.

என்­னு­டைய புதிய கட­வுச்­சீட்டு கிடைத்­ததும் இந்­தி­யா­விற்கு 8 முறை பயணம் செய்தேன். இதில் 7 முறை மும்­பைக்கு சென்றேன்.

லஷ்­கர்-­ இ-­ தொய்பா தீவி­ர­வாதி சாஜித் மிர் மும்­பையை வீடியோ எடுக்க கூறினார். பாகிஸ்­தானில் இருந்து 7 முறை இந்­தி­யா­விற்கு பயணம் செய்தேன். ஒரு­முறை மட்­டுமே ஐக்­கிய அரபு எமி­ரெட்சில் இருந்து இந்­தி­யா­விற்கு பயணம் செய்தேன். மும்­பையில் தாக்­குதல் நடத்­திய பின்னர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்­தானின் லாகூரில் இருந்து இந்­தி­யா­விற்கு சென்றேன். இந்­தி­யா­விடம் விசா கேட்டு விண்­ணப்­பித்த போது அளித்த தக­வல்கள் அனைத்தும் பொய்­யா­னவை. விண்­ணப்­பித்த போது அளித்த பிறந்த திகதி, பிறந்த இடம், தாய் தேசம் மற்றும் கட­வுச்­சீட்டு எண்கள் அனைத்தும் தவ­றா­னதே. என்று கூறி­ உள்ளார்.

பாகிஸ்­தானை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­பட்டு வரும் லஷ்­கர் –­ இ–­தொய்பா அமைப்பை சேர்ந்த தீவி­ர­வா­தி கள், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மும்­பையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் நடத்­தினர். இதில் வெளி­நாட்­டினர் உட்­பட 166 பேர் உயி­ரி­ழந்­தனர். 300க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.

இந் நிலையில் அமெ­ரிக்­காவில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்­சா­வ­ளியை சேர்ந்­த­வ­ரான டேவிட் ஹெட்லி என்ற லஷ்கர் தீவி­ர­வா­தியும் மும்பை தாக்­கு­த­லுக்கு திட்டம் வகுத்­த­வர்­களில் ஒருவர் என கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவர் 2009ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்டார். அவ­ரிடம் இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் மும்பை தாக்குதலில் அவருடைய தொடர்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.