தென்னாபிரிக்காவுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் 208 என்ற இலகு வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி 135 ஓட்டங்களுக்கு சுருண்டு மண்ணைக் கௌவியது. 

கேப்­டவுன் நியூலேண்ட்ஸ் மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய தென்­னா­பி­ரிக்க அணி முதல் இன்­னிங்ஸில் 286 ஓட்­டங்­களைப் பெற்­றது.

அதனைத் தொடர்ந்து பதி­லுக்கு ஆடிய இந்­திய அணி 209 ஓட்­டங்­களைப் பெற்­றது. 

இதை­ய­டுத்து 77 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் இரண்­டா­வது இன்­னிங்ஸைத் தொடங்­கிய தென்­னா­பி­ரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்­ட­நேர முடிவில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து  63 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. 

மழையால் மூன்­றா­வது நாள் ஆட்டம் முழு­மை­யாக இரத்து செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

இந்­த­நி­லையில், தென்­னா­பி­ரிக்க அணியின் நான்காம் நாள் ஆட்­டத்தை ஹசிம் அம்­லாவும் நைட் வோட்ச்மேன் ரபா­டாவும் தொடங்­கினர். 

நான்காம் நாள் ஆட்­ட­நேரம் தொடங்­கிய சற்று நேரத்­தி­லேயே அம்லா மற்றும் ரபாடா ஆகி­யோரை வெளி­யேற்றி இந்­திய அணிக்கு நம்­பிக்கை கொடுத்தார் வேகப்­பந்­து­வீச்­சாளர் முக­மது ஷமி. 

அடுத்­து­வந்த தலைவர் டுபிௌஸிஸ் மற்றும் டி கொக் ஆகியோர்  பும்ரா பந்­து­வீச்சில் அடுத்­த­டுத்து வெளி­யேற தென்­னா­பி­ரிக்க அணியின் சரிவு தொடங்­கி­யது. 

அந்த அணியின் பின்­கள வீரர்­க­ளையும் இந்­திய வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் அடுத்­த­டுத்து வெளி­யேற்­றினர். முடிவில் 41.2 ஓவர்­களில் தென்­னா­பி­ரிக்க அணி 130 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. 

தென்­னா­பி­ரிக்­காவின் டிவி­லியர்ஸ் 35 ஓட்­டங்­க­ளையும் தொடக்க வீரர் மார்க்ரம் 34 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர். 

இந்­திய அணி தரப்பில் முஹ­மது ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தினர். 

முதல் இன்னிங்ஸ் முன்­னி­லை­யையும் சேர்த்து இந்­திய அணிக்கு வெற்றி இலக்­காக 208 ஓட்­டங்­களை நிர்­ண­யித்­தது தென்­னா­பி­ரிக்கா. 

அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கைத் துரத்த கள­மி­றங்­கி­ய இந்­திய அணி 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 37, கோஹ்லி 28 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மிரட்டிய பிலிண்டர் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.