வட மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சீவி கோரிக்கை

Published By: Priyatharshan

09 Jan, 2018 | 04:45 AM
image

இன்னும் சில மாதங்களே நாங்கள் நாம் ஆட்சியில் இருப்போம். எனவே கடந்தகாலத்தில் எமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது எமக்கு தருவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருடங்கள் நிறைவினை கொண்டாடும் வகையில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நிகழ்வு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,

புதுவருடத்திற்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளது. அதாவது சகல புதிய அரசாங்கங்களும் தொடக்ககாலத்தில் சிறப்பாக இயங்கும். ஆனால் பின்னர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மக்களிடமிருந்துவரும் விமர்சனங்களினால் தொடக்காலத்தில் இயங்கியதுபோல் இயங்க முடியாத நிலை உருவாகி விடுகின்றது.

புத்தாண்டுக்கும் புதிய அரசாங்கங்களுக்குமிடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் புதிய அரசாங்கங்கள் எல்லாம் தொடக்க காலத்தில் நன்றாக இயங்கும். காலம் போக போக தொடக்ககாலத்தில் இயங்கியதுபோல் அவர்களால் இயங்க முடிவதில்லை. அதற்கு காரணம் காலம் செல்லச் செல்ல பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதால் மக்கள் மத்தியிலிருந்து எழும் அபிப்பிராயங்கள் மற்றும் விமர்சனங்களேயாகும். 

மேலும் வடமாகாணசபை 5 வருடத்திற்குள் நுழைந்திருக்கின்றது. இன்னும் சில மாதங்களே நாங்கள் ஆட்சியில் இருப்போம். எனவே கடந்தகாலத்தில் எமக்கு தரப்படாமல் இருந்தவற்றை இந்த வருடத்திலாவது எமக்கு தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம் போன்ற விடயங்களை இந்த வருடத்திலாவது தருவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் இந்த நிகழ்வில் சகல மதங்களினதும் தலைவர்களை அழைத்து அவர்களுடைய ஆசீர்வாதங்களை பெறுவதினால்  ஆன்மீகத்தின் ஊடாக இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கிடையில் ஒற்றுமை உருவாகும். மேலும் இந்த வருடம் தமிழ்பேசும் மக்களுக்கு தேவையான சகலவற்றயும் வழங்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43