ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் 11.30 மணியளவில்  அவ­சர சந்­திப்­பொன்றை மேற்­கொள்­ள­வுள்ளார். 

ஜனா­தி­பதி மாளி­கையில் இச்­சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ள­தோடு மதிய போசன விருந்தும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

 ஒவ்­வொரு கட்­சி­யி­லி­ருந்தும் தலா இரண்டு முக்­கிய பிர­தி­நி­தி­களை பங்­கேற்­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்­த­க­வல்கள் தெரி­வித்­துள்­ளன. 

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான பிர­சா­ரங்கள் சூடு­பி­டித்­துள்ள நிலையில் சுதந்­தி­ரக்­கட்­சியும், அதன் பங்­கா­ளி­களும் அடுத்த கட்­ட­மாக முன்­னெ­டுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் குறித்து இச்­சந்­திப்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தோடு முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அணி­யி­னரின் செயற்­பா­டுகள் அவர்கள் மீதுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை தொடர்­பிலும் ஆரா­யப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

மறு­பக்­கத்தில் இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி மோச­டிகள் குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைக்கு அமை­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது அறி­விப்­பினை விடுத்­துள்ளார். 

இந்­நி­லையில் மக்கள் விடு­தலை முன்­னணி, கூட்டு எதிர்க்­கட்சி, சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன பாரா­ளு­மன்­றத்­தினை அவ­ச­ர­மாக கூட்டி பிணை முறி­வி­வ­காரம் தொடர்பில் விவா­தத்­தினை நடத்­த­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளன. அதற்கு அமை­வாக நாளை செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் இரண்டு மணிக்கு கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் பிற்­பகல் இரண்டு மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்கு முன்­ன­தா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்­களை அழைத்­துள்ள நிலையில் பிணை முறி­மோ­ச­டிகள் தொடர்­பாக தமது தரப்பின் நிலைப்­பா­டுக்­களை அழுத்தம் திருத்­த­மாக கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­திலும் பாரா­ளு­மன்­றத்­திலும் தெரி­விப்­ப­தற்­கான வியூ­கங்கள் தொடர்­பிலும் ஆரா­யப்­ப­டலாம் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

குறித்த கூட்டத்தில் சிறுபான்மை,மற்றும் சிறு அரசியல் கட்சிகளான ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சி உள்ளிட்ட பல தரப்புக்கள் பங்கேற்கவுள்மையை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.