பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மஹிந்த ராஜ­பக் ஷ பயந்து ஓடினார். கிராம பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்க தவ­றினார். அவ்­வா­றான ஒரு­வ­ருக்கு மீண்டும் கிரா­மங்களை வழங்­கு­வதா? அவ­ருக்கு கிரா­மங்களை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்துஒடினார்? எனவே தப்­பித்து ஒடிய மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கிரா­மத்தின் பலத்தை மீண்டும் வழங்­கினால் என்ன நடக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்வி எழுப்­பினார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தலை­வர்கள் ஏதா­வது குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளானால் விசா­ரணை முகங்­கொ­டுக்க நேரிடும் என்­ப­தனை நினைவில் வைத்து கொள்­ளுங்கள். துஷ்­பி­ர­யோகம் செய்து சிக்­குண்ட மொட்டு சின்­னத்­திற்கு வாக்­க­ளித்து பிர­யோ­சனம் கிடை­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் விசேட மாநாடு நேற்று கொழும்பு கெம்பல் மைதா­னத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மிகவும் முக்­கி­ய­மா­னது. இது வெற்­றிப்­பெற வேண்­டிய தேர்­த­லாகும். எமது பலத்தை காண்­பிக்க இந்த தேர்­தலில் வெற்றி பெறு­வது கட்­டா­ய­மாகும். நாம் நாட்டின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொண்டோம். தற்­போது கிரா­மத்தின் அதி­கா­ரத்தை பெற வேண்டும். நாட்டின் பலத்­தையும் கிரா­மத்தின் பலத்­தையும் நாட்­டி­னதும்  இளை­ஞர்­க­ளி­னனும் எதிர்­கால நல­னுக்­கா­கவே கேட்­கின்றோம். நன்­றாக வாழும் சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி தேர்­தலில் ஒன்­றி­ணைந்தோம். அதற்­கா­கவே  தற்­போது இந்த தேர்­தலில் ஒன்­றி­ணைந்­துள்ளோம். 

இரண்டு வரு­டங்கள் என்ன செய்­தீர்கள் என்று கேட்­கின்­றனர். அது தொடர்பில் ஞாப­க­மூட்ட நான் விரும்­பு­கின்றேன். 2017 ஆம் ஆண்டு நடத்த வேண்­டிய ஜனா­தி­பதி தேர்­தலை மஹிந்த ராஜ­பக்ஷ இரு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே நடத்த முனைந்தார். ஏனெனில் நாட்டின் பொரு­ளா­தாரம் பாரி­ய­ளவில் வீழ்ச்சி கண்­டது. கிரா­மத்தின் பொரு­ளா­தா­ரமும் நகர கேந்­திர பொரு­ளா­தா­ரமும் முழு­மை­யாக வீழ்ச்சி கண்­டன. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்யும் பலம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு இல்­லாத கார­ணத்­தினால் அவ­ச­ர­மாக தேர்­த­லுக்கு சென்றார். என்­றாலும் எதிர்­பா­ராத வித­மாக தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ தோல்வி கண்டார். நாட்­டி­னதும் இளை­ஞர்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தை இல்­லாமல் செய்தார். 

எனினும் கடந்த இரு வரு­டத்தில் வீழ்ச்சி அடைந்த பொரு­ள­தா­ரத்தை ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வரவே நாம் முனைந்தோம். தற்­போது கடன் சுமையை குறைக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். இதன்­படி கடன் அடைத்து வரு­கின்றோம். கடன் ச‍ெலுத்­தா­விட்டால் எமது நாடு அழிவு பாதையை நோக்கி பய­ணிக்கும் நிலைமை ஏற்­படும்.  இதன்­படி இதி­லி­ருந்தே எமது வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம். 

முன்பு இந்த தேர்தல் முறை­மையை கொண்டு வர எமக்கு முடி­யாமல் போனது. எனினும் தற்­போது அனைத்து சிறிய கட்­சி­க­ளையும் இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வந்து இந்த முறை­மையை அமு­லுக்கு கொண்டு வந்தோம். இம்­முறை கிரா­மத்தை ஆட்சி செய்ய பல புதிய முகங்கள் போட்டி களத்­திற்கு வந்­துள்­ளனர். அடுத்த தேர்­தலில் இன்னும் அதி­க­மான புதி­ய­வர்கள், இளை­ஞர்கள் போட்­டி­யி­டுவர். அதே­போன்று பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரித்தோம்.  

  அம்­பாந்­தோட்டை முதல் கண்டி வரைக்கும் பாரிய உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி முன்­னெ­டுக்­க­வுள்ளோம். மத்­திய அதி­வேக வீதிக்கு முன்­னைய ஆட்­சியின் போது நிதி ஒதுக்­கீடு செய்­ய­வில்லை. இந்­நி­லையில் தற்­போது நாம் அதனை ஆரம்­பித்­துள்ளோம். தெற்கில் வீதிகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. அம்­பாந்­தோட்டை துறை­முகம் பாரிய நட்­டத்தில் இயங்­கி­யது. இதனை நாம் மாற்றி அமைத்தோம். 

டுபாய், சிங்­கப்பூர் போன்ற அபி­வி­ருத்­தியை நாட்டில் கொண்டு வர­வுள்ளோம். காலி, குரு­நாகல், களுத்­துறை உட்­பட பல பகு­தி­களில் பல்­வேறு வர்த்­தக வல­யங்­களை உரு­வாக்­க­வுள்ளோம். இதன் ஊடாக தொழில்­வாய்ப்­பினை அதி­க­ரிக்­க­வுள்ளோம். திரு­கோ­ண­ம­லை­யையும் கண்­டி­யையும் ஒன்­றி­ணைக்­க­வுள்ளோம். மேலும் யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்­ய­வுள்ளோம். 

எனவே நாம் அடித்­த­ள­மிட்ட திட்­டங்­களை பாது­காத்து முன்­கொண்டு செல்ல வேண்டும். எனவே பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் தப்­பித்து ஒடிய மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு கிரா­மத்தின் பலத்தை மீண்டும் வழங்­கினால் என்ன நடக்கும். பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மஹிந்த ராஜ­பக்ஷ பயந்து ஒடினார். கிராம பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்க தவ­றினார். அவ்­வா­றான ஒரு­வ­ருக்கு மீண்டும் கிரா­மத்தை வழங்­கு­வதா?. அவ­ருக்கு கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்து ஒடினார்?. அவர் தப்­பித்து ஒடு­வ­தற்கு இய­லா­மையே கார­ண­மாகும். 

 முன்­னைய ஆட்­சியின் ஊழல் மோசடி தொடர்­பான 19 விசா­ர­ணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்­துள்ளோம். 40 விசா­ர­ணை­களை பொலிஸில்  செய்­கின்­றனர். தாமதம் உள்­ளது. இதன்­படி துரி­த­மாக விசா­ரணை செய்ய நீதி­மன்றம் உரு­வாக்­க­வுள்ளோம். இந்த விட­யத்தில் அச்சம் கொள்ள தேவை­யில்லை. இவர்­க­ளினால் கிரா­மத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. 

எமது கட்­சி­யி­ன­ருக்­கான அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உள்­ளா­ன­வர்­க­ளுக்கு இன்னும் தீர்வு கிடைக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது. எம்மால் அனைத்து பிரச்­சி­னை­யையும் தீர்க்க முடி­ய­வில்லை. எனினும் துரி­த­மாக அனைத்து பிரச்­சி­னை­யையும் தீர்ப்போம். இந்­நி­லையில் நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்த்து வரு­வ­துடன் அபி­வி­ருத்­தி­யையும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இந்­நி­லையில் சிறிது ஒய்­வுக்­காக நான் நட­னமும் ஆடினேன்.

 அரச தொழில் மாத்­தி­ர­மின்றி தனியார் தொழில் வாய்ப்­பு­க­ளயைும் ஏற்­ப­டுத்­துவோம் வடக்கு கிழக்கு மற்றும் மலை­யகம் உட்­பட நாட­ளா­விய ரீதியில் வீட­மைப்பு திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

ஊழல், மோசடி மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட மாட்டோம் என்ற சத்தியபிரமாணம் எடுக்க தேவையில்லை. நாம் கிராமத்திற்கும் நல்லாட்சியை கொண்டு செல்வோம். உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர்கள் ஏதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை முகங்கொடுக்க நேரிடும் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். துஷ்பிரயோகம் செய்து சிக்குண்ட மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து பிரயோசனம் கிடையாது. அவர்களினால் கிராமத்தை கட்டியெழுப்ப முடியாது. கிராமத்தின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்று தர வேண்டும் என்றார்.