எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் வைரலானது.

தற்போது அரை நிர்வாணமான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரேயாவிற்கு படவாய்ப்புகள் அதிகமாக இல்லை. என்றாலும் தான் இளமையாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவே இப்போது இந்த படங்களை ஸ்ரேயா வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி உள்ளனர்.