ஜூனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடைபெறும்

Published By: Raam

09 Feb, 2016 | 08:35 AM
image

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது. இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்­போ­டப்­ப­ட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­ தா­வது,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணயம் தொடர்­பி­லான முறைப்­பாட்டு விசா­ ர­ணைகள் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாத­ம­ளவில் கைய­ளிக்­கப்­பட உள்­ளன. இதற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன.

எனவே, அறிக்கை கிடைக்­க­ப்பெற்­ற­வு டன் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் பிற்­போ­டப்­பட்­டமை தொடர்பில் அமைச்சு மீதான குற்­றச்­சாட்டை என்னால் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

2012 ஆம் 22ஆம் இலக்க உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முறைமை திருத்த சட்­ட­மூ­லத்தில் பல தரப்­பினர் எதிர்ப்­பினை வெளியிட்­டனர். இதன்­பி­ர­காரம் எல்லை நிர்­ணய பணிகள் மீளவும் ஆரம்­பித்து, இதற்­கான விசேட குழு­வொன்றும் நிறு­வப்­பட்­டது.

இதன்­படி ஜூன் மாதம் நடத்­தப்­படும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல 70 சதவீதம் தொகுதி முறைமையும், 30 சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04