பவளப் பாறை மீன் கடித்ததில், பெண் ஒருவர் தன் கையை ப்ளாஸ்ட்டிக் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

க்வீன்ஸ்லாந்தின் போர்ட் டக்ளஸ் நகரைச் சேர்ந்தவர் ஜூலி போக்கே. கடந்த நவம்பர் 26ஆம் திகதி, உள்ளூர் கடற்கரைக்குச் சென்ற ஜூலி, ஜொலியாக நீந்த நினைத்து கடலில் குதித்தார்.

பத்தே விநாடிகளில், பவளப் பாறை மீன் ஒன்று அவரை நோக்கி நீந்தி வந்தது. மீன்தானே என்று நினைத்து அதைத் தொட நினைத்த ஜூலி தன் கையை நீட்டினார்.

அடுத்த கணம், ஜூலியின் சுட்டுவிரல் மற்றும் நடுவிரலுக்கு இடைப்பட்ட பகுதியை ஒரே கடியில் பிய்த்து எடுத்துச் சென்றது அந்த மீன்.

வலியால் துடித்துப் போன ஜூலி உடனடியாக கடலை விட்டு வெளியேறினார். அவரது நிலையை உணர்ந்துகொண்ட ஒருவர், உடனடியாக அம்பியுலன்ஸுக்கு அறிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் ஜூலி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் மீன் கடி ஆழமாகப் பதிந்திருந்ததால், ப்ளாஸ்ட்டிக் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பவளப் பாறைகளுக்கு நிகரான நீச்சல் உடையைத் தாம் அணிந்திருந்ததே இந்த அனர்த்தத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஜூலி கூறியுள்ளார்.