தற்­போது ஏற்­பட்­டுள்ள மருத்­துவ தொழில்­நுட்ப வளர்ச்­சியால் மகப்­பே­றின்மை  என்­பது ஒரு குறை­பாடு மட்­டுமே என்றும் அதற்கு எளிய தீர்வு உண்டு என்றும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. சென்ற தலை­மு­றையில் குழந்­தை­யின்மை பிரச்­சி­னைக்கு பெண்கள் தான் காரணம் என்று சொல்­லப்­பட்டு வந்­தது. ஆனால் இன்று அந்த பிரச்­சி­னைக்கு ஆண்கள் முப்­பது சத­வீதம் பெண்கள் முப்­பது சத­வீதம் இரு­வ­ருக்கும் பொது­வாக இருக்கும் ஆரோக்­கிய குறை­பா­டுகள் முப்­பது சத­வீதம் பரி­சோ­த­னை­களின் மூல­மாக மட்­டுமே கண்­ட­றி­யப்­ப­டக்­கூடும். கார­ணங்கள் பத்து சத­வீதம் என்று ஆய்வின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.  

தமது புகை­யிலை பயன்­பாடு, அவ­ரவர் களு­டைய உடல் வெப்ப நிலைக்கு ஏற்ப பணி­யாற்­றாமல் அதி­க­மாக வெப்பம் மிகுந்த இடத்தில் பணி­யாற்­று­வது, நீரி­ழிவு நோயிற்கு ஆளா­கி­யி­ருப்­பது, இனப்­பெ­ருக்க உறுப்­பு­களின் செயல்பாட்டில் ஏற்­படும் கோளா­றுகள், உடற் பருமன், ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்தும் வேதிப் பொருட்­களை தொடர்ந்து பயன்படுத்­து­வது, அணுக்­க­திர்­வீச்சு தாக்­க­முள்ள பகு­தி­களில் வசித்தல், வாழ்க்கை முறையை மாற்­றி­ய­மைத்துக் கொள்­வது, காலங்­க­டந்த திரு­மணம், கரு­க­லைப்பை மேற்­கொள்­வது என சில­வற்றை குழந்­தை­யின்­மைக்­கான கார­ண­மாக பட்­டி­ய­லி­டலாம்.’ என்ற தக­வலை பகிர்ந்து கொண்டே எம்­முடன் பேசத் தொடங்­கு­கிறார் டொக்டர் தன­பாக்­கியம். இவர் கோவையில் இயங்கி வரும் சுதா டெஸ்ட் ட்யூப் பேபி மையத்தின் நிர்­வாக இயக்­குநர் மற்றும் தலைமை மருத்­துவ நிபுணர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

செயன்­முறை கருத்­த­ரிப்பு குறித்த மருத்­துவ விளக்கம்

இயற்­கை­யா­கவே கருத்­த­ரிக்க இய­லாத நிலை­யி­ருக்கும் தம்­ப­தி­களின் வாரிசு கனவை நன­வாக்­கு­வ­தற்­காக மருத்­துவத்­துறை கண்­ட­றிந்த நவீன சிகிச்சை தான் செயன்­முறை கருத்­த­ரிப்பு. தம்­ப­தி­களின் உடல் நிலை,  உயி­ரணுக்களின் நிலை, கரு­முட்­டையின் நிலை ஆகி­ய­வற்றைப் பொருத்து ஐ.வி.எப்., இக்ஸி, இம்சி உள்­ளிட்ட பல முறை­களில் இந்த செயன்­முறை கருத்­த­ரிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

ஐ.வி.எப்., இக்ஸி மற்றும் இம்சி குறித்து விளக்­கு­க..?

உட­லுக்கு வெளியே செயற்­கை­யான முறையில் நிகழ்த்­தப்­படும் கருக் கூட்­டலே ஐ.வி.எப். எனப்­படும். இயல்பை விட குறை­வான உயி­ரணுக்களைக் கொண்ட ஆண்கள், கருக்­கு­ழாயில் அடைப்பு மற்றும் சிக்­கல்­களைக் கொண்ட பெண்கள், ஒழுங்­கற்ற முறையில் மாத­விடாய் சுழற்­சி­யுள்ள பெண்கள்,ஹோர்மோன் சுரப்­பி­களின் சமச்­சீ­ரற்ற தன்­மையால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் பெண்கள் ஆகியோர் இவ்­வ­கை­யி­ன­தான சிகிச்சைக்கு பொருத்­த­மா­ன­வர்கள். அதே போல் இக்ஸி முறையைப் பற்றி தெரிந்து கொள்­ளுங்கள். மாற்­றி­ய­மைத்துக் கொண்ட வாழ்க்கை நடை­முறை, தோல் மற்றும் மருந்து கம்­ப­னி­களில் பணி­யாற்றும் நபர்கள், புகைப் பிடிப்போர், மது அருந்து வோர், தொடர்ந்து ஒரே­யி­டத்தில் அமர்ந்து பணி­யாற்­று­ப­வர்கள், மடிக்­க­ணி­னியை அதி­க­ளவில் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் ஆகி­யோர்­க­ளுக்கு அவர்­களின் உடல் வெப்­ப­ நி­லையைக் காட்­டிலும் கூடு தலான வெப்ப நிலையில் தொடர்ந்து இயங்­கு­வதால் அவர்­களின் உயி­ரணு உற்­பத்தி மற்றும் அதன் வீரி­யத்­தன்மை பாதிக்­கப்­ப­டு­கி­றது. இவர்­க­ளுக்கு ஐ.வி.எப். என்ற சிகிச்சை பெரு­ம­ளவில் பல­ன­ளிப்­ப­தில்லை. இவர்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டது தான் இக்ஸி. இம்­மு­றையில்  மிகக்­கு­றை­வான எண்­ணிக்­கையில் உயி­ர­ணுக்­களைக் கொண்ட ஆணி­ட­மி­ருந்து ஒரே­யொரு ஆரோக்­கி­ய­மான உயி­ர­ணுக்­களை ஊசி மூலம் எடுத்து வெளியே எடுக்­கப்­பட்ட கரு­முட்­டையில் நேர­டி­யாக செலுத்தி கருக்­கட்­ட­லுக்­காக ஆராய்ச்­சிக்­கூ­டத்தில் வைக்­கப்­படும். பின்னர் அதனை எடுத்து பெண்ணின் கருப்­பையில் வைத்­து­வி­டு­வார்கள். 

இதனைத் தொடர்ந்து ஆணின் உயி­ர­ணுக்­களின் எண்­ணிக்கை குறை­வாக இருப்­ப­வர்­க­ளுக்கு இக்சி முறையில் பல­ன­ளிக்­க­வில்லை என்ற நிலை ஏற்­பட்ட போது இம்சி அதா­வது (Intracytoplasmic Morphologically Selected Sperm Injection) எனப்­படும் சிகிச்சை முறை கண்­ட­றி­யப்­பட்­டது. இதன் போது குறை­வான எண்­ணிக்­கையில் உள்ள ஆணி­ட­மி­ருந்து பெறப்­படும் உயி­ர­ணுக்கள் நவீன தொலை­நோக்­கிகள் மூலம் ஆறா­யிரம் முறை பெரி­தாக்­கப்­பட்டு, அவை பரி­சோ­திக்­கப்­பட்டு, அவற்றில் ஆரோக்­கி­ய­மான ஒரே­யொரு உயி­ர­ணுவைத் தெரிவு செய்து, அதனை எடுத்து கருக்­கட்­ட­லுக்­காக பயன்­ப­டுத்­து­வார்கள். இதனால் அவர்களுக்கு கருக்­கட்டல் நல்­ல­மு­றையில் நடை­பெ­று­கி­றது. அதே சம­யத்தில் இம்சி சிகிச்­சையில் குறை­வான உயி­ர­ணுக்­களின் செயல்­பாடு, தோற்றம், அதன் வீரியம் குறித்தும் முழு­மை­யாக ஆய்வு நடத்­தப்­ப­டு­கி­றது. இதனால் இம்சி முறையில் செயன்­முறை கருத்­த­ரிப்பு வெற்­றி­க­ர­மாக பல­ன­ளிக்­கி­றது.

 

இந்த முறையின் வெற்றி வீதம் குறித்து..?

இதனை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மருத்­துவ பேரா­சி­ரியர் பார்த்துவ் என்­பவர் 2002 ஆம் ஆண்டில் கண்­டு­பி­டித்தார். 2006 ஆம் ஆண்டில் இந்த முறை பரி­சோ­த­னைக்­குள்­ளாக்­கப்­பட்டு அதன் வெற்றி வீதம் கண்­ட­றி­யப்­பட்­டது. அதன் பிறகு இது உலகம் முழு­வதும் பிர­ப­ல­மா­னது. அண்­மையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்­ப­தி­யினர் குழந்­தை­யின்மை பிரச்­சி­னைக்­காக எங்­க­ளு­டைய மருத்­துவமனையின் உத­வியை நாடி­னார்கள். அவர்­க­ளுக்கு இக்ஸி முறையை விட இம்சி முறை தான் சரி­யாக இருக்கும் என்­பதை அவர்­க­ளிடம் மேற்­கொண்ட பரி­சோ­த­னை­களின் மூலம் உறு­திப்­ப­டுத்திக் கொண்டு, இம்சி முறை­யி­லான செயன்­முறை கருத்­த­ரிப்பு சிகிச்­சையை தொடங்­கினோம். கருவை உரு­வாக்கி, அதனை உறுதி செய்து, இரண்டு மாத சிகிச்சை மற்றும் கண்­கா­ணிப்­பிற்கு பிறகு அவர்­களை இலங்?கைக்கு அனுப்பி வைத்தோம். கடந்த ஆண்டின் இறு­தியில் அப்­பெண்­ணிற்கு ஆண் குழந்தை பிறந்­தி­ருக்­கி­றது. இந்த செய்தி, எங்­க­ளு­டைய மருத்­துவமனையில் இம்சி முறையில் முதன்­மு­த­லாக உரு­வாக்­கப்­பட்ட கரு வெற்றிப் பெற்­றதில் அந்த பெற்­றோர்­களைக் காட்­டிலும் எங்­க­ளுக்கும் கூடுதல் மகிழ்ச்­சியை அளித்­தது. அத்­துடன் இந்த மையம் குழந்­தை­யில்­லாத தம்­ப­தி­களின் நம்­பிக்­கை­யான மருத்­து­வ­ம­னை­யாக தொடர்ந்து செயல்­பட்டு வரு­வ­திலும் அடுத்­த கட்ட சந்­தோ­ஷத்தைப் பெற்­றி­ருக்­கிறோம். அத்­துடன் இம்சி என்ற சிகிச்சை முறையும் வெற்­றி­ வீ­தத்தை அளிக்கும் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம்.

 இம்­சியை யாருக்கு பரிந்­துரை செய்­வீர்கள்?

பொது­வாக ஐ.வி.எப். என்ற சிகிச்சை பெண்­க­ளுக்­கா­னது என்றும், இக்ஸி என்­பது ஆண்­க­ளுக்­கா­னது என்றும் மருத்­து­வத்­து­றையில் கருத்து உண்டு.அதே போல் ஐ.வி.எப்பைக் காட்­டிலும் இக்­சியில் தான் வெற்றி வீதம் அதிகம் என்றும் சொல்­வார்கள். இந்­நி­லையில் இக்சி முறையில் முயற்சி செய்து எதிர் மறை­யான பலனைப் பெற்­ற­வர்கள், குறைவான உயிரணுக்களைக் கொண்ட ஆண்கள், இக்சி முறை பலனை அளிக்க வில்லை என்றால் இம்சி முறையை தெரிவு செய்யலாம். இம்முறையில் ஆணிடமிருந்து பெறப்படும் குறைவான உயிரணுக்களை டிஜிற்றல் முறையில் ஆறாயிரம் மடங்கு பெரிதாக்கி உற்றுநோக்குவதால், அதில் எந்த உயிரணு ஆரோக்கியமானதாகவும், வீரியமிக்கதாகவும், உயிரணுவின் தோற்றம் மற்றும் செயல்பாட்டில் குறைபாடு இல்லாததாகவும் இருக்கிறது என்பதை துல்லிஸயமாக கண்டறிய இயலும்.  மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் 0091 98941 20270 மற்றும் மின்னஞ்சல் முகவரி sudhainfertility@gmail.com

                      

                                 –சந்திப்பு: திவ்யா .