மூன்றாண்டு சிறை: மீண்டும் சிக்கினார் லல்லு

Published By: Devika

07 Jan, 2018 | 08:24 AM
image

மாட்டுத் தீவன வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பீஹார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், மற்றொரு ஊழல் வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

1990-94 காலப் பகுதியில், டியோகர் மாவட்ட திறைசேரியில் இருந்து முறைகேடாக 89 இலட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரிலேயே லல்லு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி லல்லுவை குற்றவாளி என்று உறுதிசெய்த நீதிமன்றம், அவருக்கான தீர்ப்பை நேற்று (6) வழங்கியது.

மூன்றாண்டுகளை விடக் குறைவான ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் சிறப்பு நீதிமன்றில் இருந்து பிணை கோர முடியும் என்பதால், லல்லுவின் உடல் நிலையைச் சுட்டிக்காட்டிய அவரது சட்டத்தரணிகள், தண்டனையைக் குறைக்குமாறு கோரினர். எனினும் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இத்தண்டனையின் பிரகாரம் சிறை செல்லும் லல்லு, விரைவில் வெளிவர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

தீர்ப்பு குறித்து ட்விட்டர் பதிவிட்ட லல்லு, “இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல். என்னைப் பின்பற்றினால் தப்புவாய்; இல்லாவிட்டால் சிக்குவாய் என்பதே பா.ஜ.க.வின் சித்தாந்தம். ஆனால், பா.ஜ.க. அரசைப் பின்பற்றுவதை விட, சமூக நீதிக்காக தண்டனையை ஏற்பதை கௌரவமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10