எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், எந்த விதத்திலும் அரச அலுவலகங்களால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவையைக் குழப்பும் வகையில் அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில், அரச நிறுவனங்களோ அல்லது அரச உடைமைகளோ எவ்விதத்திலும் பிரச்சாரப் பணிகள் உள்ளிட்ட எவ்விதமான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஒவ்வொரு அமைச்சினதும் செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.

இவ்வருடத்திற்கான அபிவிருத்திப் பணிகள் வருட ஆரம்பம் முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறியத் தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.