சுனாமி எச்சரிக்கை கருவியில் திருத்தம் மேற்கொண்டிருந்தபோது, பரீட்சார்த்தமாக ஒலித்த சுனாமி எச்சரிக்கையால் அமெரிக்காவின் ஒரேகோன் நகர மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.

கரையோர நகரான ஒரேகோனில், கடந்த புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதில், இன்னும் நான்கு மணி நேரங்களில் சுனாமி கரையோரப் பகுதியைத் தாக்கவிருக்கிறது என்றும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாரும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். கரையோரங்களில் நின்றுகொண்டிருந்த மக்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதுபற்றித் தெரியவந்த பொலிஸார், உரிய துறையைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, திருத்த வேலைகளை நடைபெறுவதும் திருத்தத்தின் பின் பரீட்சார்த்தமாக எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.