அரசு பேருந்து ஊழியர்கள் ஆரம்பித்திருக்கும் வேலை நிறுத்தத்தால், தமிழகம் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சம்பளப் பிரச்சினையில் முடிவு காணப்படாததையடுத்து நேற்று (5) இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு நடிகர் கமல்ஹாசன் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கேட்டுக்கொண்டுள்ளபோதும், ‘ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வைத் தர முடியாது’ என்று அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது.

ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஊழியர்கள் சிலர் பேருந்துகளை இயக்கிய போதிலும் அது வழக்கமான பேருந்துச் சேவைகளில் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை. இதனால் பயணிகள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்டோக்களும் கூலி வண்டிகளும் தனியார் பேருந்துகளும் சடுதியாக தமது கட்டணங்களை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்த்தியுள்ளன. 

இதனால், இலட்சக்கணக்கானவர்கள் தமது பயணங்களை இரத்துச் செய்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.