(ஆர்.ராம்)

பிணைமுறிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமானதும் அதற்குரிய பதிலளிப்பேன் என்று முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அது குறித்த அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளித்திருந்தது. 

அதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் தனது விசேட அறிவிப்பினை விடுத்திருந்தார். 

அந்த அறிவிப்பில் முன்னாள் நிதி அமைச்சரின் ரவிகருணாநாயக்கவும் பொறுப்புக்கூறவேண்டியவர்களுள் ஒருவராக காணப்படுவதாக அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும், குற்றவியில் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் நிதி அமைச்சராக பதவி வகித்திருந்தேன். ஏனது நிருவாக கட்டமைப்பிற்குள் இலங்கை மத்திய வங்கியோ அரச வங்கிகளோ காணப்படவில்லை. அவ்வாறிருக்கையில் நான் எவ்வாறு பிணைமுறிகள் விற்பனை விடயத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டேன் என்பதை புரிந்துகொள்ளமுடியாதுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கமானதும் அதற்குரிய பதிலை வழங்குதற்கு தயாராகவுள்ளேன். அதற்கான தயர்பாடுத்தல்களில் ஈடுபட்டுள்ளேன் என்றார். 

இந்நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.