(லியோ நிரோஷ தர்ஷன்)

2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 அரசாங்கம் என்ற வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றதத்திற்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுத்தோம். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு குழு தொடர்ந்தும் அரச மற்றும் தனியார் துறையுடன் தொடர்புக்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன் பலனாக அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் .

2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளது. மறுபுறம் நியாயமான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் விலக வில்லை.

ச.தொ.ச. மெகா வர்த்தக நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை வெலிசரயில் இடம்பெற்றது . இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.