( எம். மின்ஹாஜ் )

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எம்.பி. பதவி வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாளை குறித்த பதவி நியமனம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசி­யப்­பட்­டி­யலினூடாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வான எம்.கே.டீ.எஸ். குண­வர்த்­தன இறந்­ததை அடுத்து, தேசிய பட்­டியல் ஆச­னத்­திற்கு யாரை நிய­மிப்­பது என்­பது தொடர்பில் சிக்கல் நிலை எழுந்திருந்த நிலையில், அவரின் வெற்றிடத்திற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.