ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மது பாவனைகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்தே குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

தற்கொலை தாக்குதல்தாரி இராணுவ சீருடை அணிந்திருந்ததாகவும் ,தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.