தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்திலுள்ள 6 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் குறித்த 6 வீடுகளிலும் இக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

 

முச்சக்கர வண்டி ஒன்றில் வருகை தந்த இருவர் வீடுகளுக்குள் உட்புகுந்து மின்சாரத்தை துண்டித்து விட்டு அங்கு இருந்த உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

தங்க ஆபரணங்கள் , 15,000 ரூபா பணம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அதிகாலையில் பொலிஸார் சம்பவம்  இடம் பெற்ற இடத்திற்கு விரைந்ததோடு விசாரனைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.  கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கத்தியை காட்டியதாகவும் லேஸர் டோச் பயன்படுத்தியதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

மேலும் திருட்டில் ஈடுபட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் குறித்த தோட்டப் பகுதியிலேயே இருந்ததாகவும் அவர்களை பிடிக்க முயன்ற போது ஓடி மறைந்து விட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

அதே சமயம் கொள்யைில் ஈடுபட்டநபர் ஒருவர் தனது உடை ஒன்றை விட்டுச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.