அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய ஜயவிக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.