(எம்.சி.நஜிமுதீன் )

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக நியாயம் கிடைக்கப்போவதில்லை. எனவே அடுத்துவரும்  ஆட்சியின் போதே குறித்த மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கூட்டு எதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு பொரளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நாம் கடந்த 2015 ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன்  இலஞ்ச  ஊழல் ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளோம்.

இதன் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனக் குறிப்பிட்டு நான் தான் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.