நுவரெலியாவில் சிகரட் விற்பனை செய்யும் முகவரகத்துக்கு உரித்தான ஒரு கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நுவரெலியா - கலாபுர - கெலேபெத்த பகுதியில் வைத்து இந்த முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டதாக நுவரெலிய பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

குறித்த முச்சக்கர வண்டியின் உரிமையாளர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளையர்கள் முச்சக்கர வண்டியை கடத்திச் சென்று  கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சிகரட் விற்பனை செய்யும் முகவரகத்துக்கு உரித்தான லொறி பிரதான வீதியை தவிர்த்து கிளை வீதியில் பயணித்த போது கடந்த 2ஆம் திகதி இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் இருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் முச்சக்கரவண்டியும், லொறியும் அவ்வீதியினூடாக சென்றமை பதிவாகியுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

குறித்த முகவரகத்தின் காசாளர் மற்றும் லொறி சாரதி ஆகியோர் இக் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு,

மிளகாய்த் தூளைத் தூவி துணிகரக் கொள்ளை ! நடந்ததென்ன ?