தைப்­பொங்­கலை முன்­னிட்டு பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் குறைந்த விலையில் தேங்­காயை வழங்­க­வுள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு விடுத்த அறி­வு­றுத்­தலுக்கு அமைய இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­க­பட்­ச­மாக ஒரு தேங்காய் 65 ரூபா வீதம் 10 தேங்­காய்­களை நுகர்வோர் குரு­நாகல் பெருந்­தோட்டக் கம்­ப­னியில் பெற்­றுக்­கொள்ள முடியும் என குரு­நாகல் பெருந்­தோட்டக் கம்­பனி விற்­பனை முகா­மை­யாளர் ஜயத் ஜய­வர்­தன தெரி­வித்தார்.

இரண்டு இலட்­சத்­திற்கும் அதி­க­மான தேங்­காய்கள் லங்கா ச.தொ.ச. நிறு­வ­னத்­திடம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எல்­க­டுவ பெருந்­தோட்டக் கம்­பனி லங்கா ச.தொ.ச.­விற்கு 50000 தேங்காய்களை வழங்கியுள்ளதாக அதன் பொது முகாமையாளர் ரோவிந்த பெரேரா தெரிவித்தார்.