மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­காரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளித்த அனிகா விஜே­சூ­ரி­யவின் சகோ­த­ர­ருக்கு தொலை­பேசி ஊடாக மிரட்டல் விடுத்த சம்­ப­வத்தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட ஷனில் நெத்­தி­கு­மார பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். 

 நீதி­மன்­றினால்  அனுப்­பப்­பட்ட அறி­வித்­த­லுக்கு அமைய, நேற்று அவர்  நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கிய நிலையில், ஒன்­றரை இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடு­வித்து கொழும்பு - கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்டார்.

அத்­துடன், அவரை இன்­றைய தினம்  குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராகி வாக்­கு­மூலம் அளிக்­கவும் நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். பிணைமுறி மோசடி விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்ய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்த, அனிகா விஜே­சூ­ரி­யவின் சகோ­த­ர­ரான விஜித் விஜே­சூ­ரி­யவை அச்­சு­றுத்­திய விவ­காரம் தொடர்பில், ஷனில் நெத்­தி­கு­மா­ர­வுக்கு எதி­ராக குற்­றம்­சாட்­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை நடத்தி வரு­கின்­றமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.