"கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இடைகால அறிக்கையை நாமும் ஆதரிப்பதாகிவிடும்"

Published By: Digital Desk 7

04 Jan, 2018 | 04:17 PM
image

கூட்டமைப்பிற்கு வாக்களித்தால்  இடைகால அறிக்கையை நாமும் ஆதரிப்பதாகிவிடும்  என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  கிளிநொச்சி அமைப்பளரும் முதன்மை வேட்பாளருமான  தங்கவேல் ஜெகதீஸ்வரன், இன்று முற்பகல்  கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எதிர்வரும்  காலத்தில் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட இருக்கின்றது. இப்பொழுது வந்துள்ள இடைக்கால அறிக்கையின் அங்கீகாரமாக இத் தேர்தல் வெற்றி பார்க்கப்படப் போகின்றது. நீங்கள் யாருக்கு வாக்களிக்கின்றீர்களோ, அவர்கள் கொண்டுள்ள கொள்கை இடைக்கால சீர்திருத்தத்தின் மீது கொண்டுள்ள கொள்கையாகப் பார்க்கப்பட இருக்கின்றது.  நீங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால் அவர்கள் இடைகால நிர்வாக வரைபை ஆதரித்திருக்கின்றார்கள். மக்களும் ஆதரிக்கின்றார்கள் என்ற ஒரு செய்தி வெளியே வரப்போகின்றது.

தேசிய அரசியலைப் பொறுத்தவரையிலே மிகவும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு தேர்தலாக இத் தேர்தல் அமைகிறது. இது வெறுமனே ஒரு உள்ளூராட்சித் தேர்தல் என மட்டும்  கருதிவிடாது நீங்கள் கட்சியையும் பார்த்து சிறந்த வேட்பாளரையும்  பார்த்து வாக்களிக்க வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கு  பின்னர் நடந்த தேர்தலில் அவர்கள் மூன்று சபைகளையும் கைப்பற்றி அரசியல் செய்து வருகின்றார்கள். ஆனாலும் இன்று வரை குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்தவித அபிவிருத்தியையும் செய்யவில்லை. அதே போல ஊழல் மலிந்த அதிகார துஸ்பிரயோகம், பெண்களை இழிவு படுத்தக்கூடிய நிர்வாகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இம் முறை தேர்தல் சீர்திருத்தங்கள் சிறப்பாக வந்திருக்கின்றது. எமது நோக்கம் தேசிய அரசியலில்,  கொள்கைகள் நேர்த்தியாக இருக்கின்றது இவ் உள்ளூராட்சியில் ஊழல் அற்ற அதிகார துஸ்பிரயோகம் அற்ற உள்ளூர் அபிவிருத்திகளுடன் கூடிய ஒரு மக்கள் நேய நிவாகத்தை அமைப்போம் எமது வெற்றி மக்களின் வெற்றி" என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04