வவுனியா நகரத்தில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் மது வரித்திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த இரு வர்த்தக நிலையத்திலிலும் திடிர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இரு வர்த்தக நிலையங்களிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 14 லட்சம் பெறுமதியான புகையிலையை கைப்பற்றியுள்ளதாகவும்  குறித்த உற்பத்தி பொருளை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா மதுவரி திணைக்கள அத்தியட்சகர்  எஸ். செந்தூர்செல்வன் தெரிவித்தார்.

புகையிலையை  உற்பத்தி செய்யும் நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ் உற்பத்தி பொருட்கள் இலங்கையில் பிரபல புகையிலை தயாரிப்பு நிறுவனத்தின் சின்னங்கள், பெயரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.