(இரோஷா வேலு)

ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி சட்டத்தினையும்      நீதித்துறையும்  முழுமையாக சாட்டிவிட்டு பொறுப்புலிருந்து ஜனாதிபதி தப்பித்துக் கொள்ள முடியாது. சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிறநாட்டவர்களை அதிகாரத்தில் அமர்த்தியதே அவர் கையெழுத்திட்டு கொடுத்த சட்டமூலத்தினால் தான். எனவே இதற்கு முழுமையான பொறுப்பாளர் ஜனாதிபதியே என சாடுகிறார் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ்  தெரிவித்தார். 

மத்திய வங்கி நிதி மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கூற்று தொடர்பான தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் கலந்துரையாடல் பொரெல்லை - ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் இடம்பெற்றது.  இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.