கொழும்பு மாந­கரில் யாசகம் எடுப்­ப­வர்­களைக் கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.  ஜன­வரி முதலாம் திகதி முதல் கொழும்பில் யாசகம் எடுக்க தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், முதல் கட்­ட­மாக வாகனங்­களில் யாசகம் கேட்­போரைக் கைது செய்து புனர்­வாழ்வு மையங்­க­ளுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

 அதன்­படி  போக்­கு­வ­ரத்து சமிக்ஞை விளக்­கு­களில் நிற்கும் வாக­னங்­களை நெருங்கி யாசகம் கேட்­ப­வர்கள், வேறு இடங்­களில் வாக­னங்­களில் வரு­வோ­ரிடம் யாச கம் எடுப்­ப­வர்கள் தொடர்பில் இதன்­போது விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

 வாகன உரி­மை­யா­ளர்கள் அதி­க­ளவா­னோரின் முறைப்­பாட்டை கருத்தில் கொண்டு இந் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் திட்டப் பணிப்­பாளர் ரஞ்ஜித் மீகஸ்­வத்த தெரி­வித்­துள்ளார். அதன்­படி பொலி­ஸாரால் கைது செய்­யப்­ப­டு­ப­வர்கள் ரிதிக­மையில் உள்ள புனர்­வாழ்வு மையத்­துக்கு அனுப்பி வைக்­க­ப்படுவர் எனவும் அவர் தெரி­வித்தார்.

இத­னி­டையே யாசகம் எடுப்­போரில் தொழில் செய்ய விருப்­ப­மா­ன­வர்கள், விசேட தேவை­யற்­ற­வர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளது. 

அதன்­படி தொழில் செய்ய விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு 1500 ரூபா சம்­ப­ளத்தில் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் உள்ள தாழ் நில அபி­வி­ருத்தி சபையின் கீழ் வேலை வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து.