ஐந்து வருடங்களாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 67 வயது இங்கிலாந்துப் பெண், சிகிச்சை பலனளிக்காத நிலையில், மஞ்சளை மட்டுமே பயன்படுத்தி ஆச்சரியப்படும் வகையில் குணமடைந்துள்ளார்.

டியனெக் ஃபெர்குசன் என்ற இந்தப் பெண், தற்போது நோயிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து சாதாரண வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டார்.

வழக்கமான சிகிச்சைகளைத் தவிர்த்து மஞ்சளை மட்டுமே மருந்தாகக் கொண்டு குணமடைந்துள்ள முதலாவது புற்றுநோயாளி இவரே என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கீமோதெரபி, கல மாற்று சிகிச்சைகள் என்பன பலன் தராத நிலையில், மஞ்சளில் காணப்படும் ‘குர்குமின்’ என்ற ஒரேயொரு பதார்த்தத்தை நாளொன்றுக்கு எட்டு கிராம் அளவு மட்டுமே பயன்படுத்தி, நோயில் இருந்து குணமாகியுள்ளார் இவர்.

இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆறாயிரம் பேர் இரத்தப் புற்றுநோய்க்கு ஆளாகும் அதேவேளை, மூவாயிரம் பேர் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.