2018ஆம் ஆண்டு தொடங்கி மூன்று நாட்கள் மட்டுமே ஆன நிலையில்  இவ்வாண்டு தொடர்பான அதிர்ச்சிகர பல கணிப்புகள் வர தொடங்கியுள்ளன.

புவியியல் ஆய்வாளர்கள் இவ்வாண்டு எப்படி இருக்கப்போகிறது? என ஆராய்ச்சி செய்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து, மைய விலக்கு விசை குறைந்து பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகி  பூமித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையும் அபாயம் உள்ளதாகவும், அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் வரை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்ற பல நிலநடுக்கங்கள் இந்த வருடம் உருவாக உள்ளதாகவும், இதுபோன்று ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் வரை நிலநடுக்கம் வந்தால் அந்த பகுதியே சில நிமிடங்களில் தரைமட்டமாகிவிடும் எனவும் கூறப்படுகிறது.

இந் நிலநடுக்கங்கள் மேற்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எரிமலைகளும் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.